நான் ஒரு 'ஓரினச் சேர்க்கையாளன்': ஆப்பிள் சிஇஓ டிம் குக் 'வெளிப்படை'
நியூயார்க்: தான் ஒரு கே(ஓரினச் சேர்க்கையாளர்) என்றும், அதற்காக பெருமைப்படுவதாகவும் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் பத்திரிக்கை ஒன்றில் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் ப்ளூம்பெர்க் பிசினஸ்வீக் பத்திரிக்கையில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தனது கருத்துகளை தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது,

கே
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு 'கே'. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். கேயாக இருப்பது தான் கடவுள் எனக்கு அளித்த சிறந்த பரிசுகளில் ஒன்று என்று நினைக்கிறேன்.

ஆர்வலர்
நான் ஒரு ஆர்வலர் என்று கூற மாட்டேன். ஆனால் பிறர் செய்த தியாகங்களால் நான் எவ்வளவு நன்மை அடைந்துள்ளேன் என்பதை உணர்ந்துள்ளேன்.

ஆப்பிள்
நான் ஒரு கே என்பதை கேள்விப்பட்டு ஒரு ஆணோ, பெண்ணோ தங்களை உணர்ந்தால் அல்லது தனிமையில் இருப்பதாக நினைக்கும் ஒருவருக்கு ஆறுதல் அளித்தால் அது நான் என் தனிப்பட்ட விஷயத்தை வெளியில் தெரிவித்ததற்கு கிடைக்கும் பலனாகும். ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் நான் கே என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

டிம் குக்
டிம் குக் ஒரு கே என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வெளியே கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இத்தனை நாட்களாக தனது தனிப்பட்ட விஷயம் பற்றி பேசாத டிம் தான் ஒரு கே என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications