நீ்ங்க வேலையைப் பாருங்க, நாங்க உங்க கருமுட்டையைப் பாதுகாக்கிறோம்.. ஆப்பிள், பேஸ்புக்!
லண்டன்: தங்களது பெண் ஊழியர்களின் கருமுட்டையை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்க நிதியுதவி செய்யவுள்ளதாம் ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள். இதன்மூலம் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு விட்டு, எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலாம் என அவை கூறுகின்றன.
வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும், பிள்ளைப் பேறை பின்னால் பார்த்துக் கொள்ளும் வகையிலும் இந்த சலுகையை அளிக்கின்றனவாம் இந்த இரு நிறுவனங்களும். அதாவது தாய்மை முக்கியமல்ல, அதைப் பிறகு கூட பார்த்துக் கொள்ளலாம். முதலில் நன்றாக வேலை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றன இந்த இரு நிறுவனங்களும்.
பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் மகிழ்ச்சிக்காக விடுமுறைக் கொண்டாட்ட சலுகைகள், ரிலாக்ஸாக வேலை செய்யும் சுற்றுச்சூழல் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என பல்வேறு சலுகைகளை வழங்கி குஷி படுத்தி வருகின்றன.
அந்தவகையில், முதன்முறையாக பெண் ஊழியர்களின் கருமுட்டையை சேமித்து வைக்க நிதியுதவிசெய்ய சம்மதித்துள்ளது ஆப்பிள் மற்றும் பேஸ்புக்.

நிதியுதவி...
அதன்படி வருடத்திற்கு 500 டாலர் முதல் 10,000 டாலர் வரை இந்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு பணம் தருமாம். பேஸ்புக் நிறுவனம் 20,000 டாலர் வரை பணம் தருகிறதாம்.

மேலும் விரிவாக்க திட்டம்...
தற்போது கருமுட்டையை பதப்படுத்த பணம் கொடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள இந்த நிறுவனங்கள், விரைவில் இதனை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது, மகப்பேறுக்கான விடுமுறையை அதிகரித்தல், குழந்தையின்மைக்கான சிகிச்சை போன்றவை அவற்றில் அடக்கமாம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி...
அதேபோல், குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்து எடுத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம். இவற்றின் மூலம் பெண் ஊழியர்கள் தங்கள் சிறப்பான வேலையை நிறுவனத்திற்கு தருவார்கள் என அது எதிர்பார்க்கிறதாம்.

பாராட்டு...
இத்திட்டத்திற்கு பெண் ஊழியர்கள் அனைவரிடமிருந்தும் இதுவரை சம்மதம் கிடைக்கவில்லையாம். ஆனபோதும், சில பெண் ஊழியர்கள், இது பாலின வேறுபாட்டை மறந்து குடும்பத்திற்காக உழைப்பதற்கு உதவும் என பாராட்டுகின்றனராம்.

நிறுவனங்களின் திட்டம்...
இப்படி நிறுவனங்கள் ஊழியர்களை சொகுசாக வைத்து அவர்களிடமிருந்து வேலையைப் பிழிந்தெடுப்பது புதிதல்ல. கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகத்திலேயே மசாஜ், லாண்டரி சேவை உள்ளிட்டவற்றை செய்து கொடுக்கிறது.
விட்டால், நீ்ங்க அப்படியே வேலையைப் பாருங்க, நாங்க முதுகு தேய்த்துக் கூட குளிப்பாட்டி விட்டுர்றோம் என்று கூறுவார்கள் போலயே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications