சீர்குலைந்த மொராக்கோ.. பூகம்பத்தால் 2000ஐ தாண்டிய உயிரிழப்பு! அங்குள்ள இந்தியர்கள் நிலை என்ன? பரபர
ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்து இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு மொராக்கோ.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். அந்தளவுக்குச் சின்ன நாடாக இருந்த மொரோக்கோவில் நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இரவு 11 மணியளவில் இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக் கட்டுகளைப் போல அப்படியே சரிந்தன.
மொராக்கோ: அங்கே சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் மராகேச் என்ற இடத்தின் தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்கப் புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவிகாயுள்ளது. மொராக்கோவின் முக்கிய கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கே அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதிலும் இந்தளவுக்கு ஒரு வலுவான நிலநடுக்கத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே அங்கே கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. கட்டிடங்கள் அனைத்தும் அப்படியே சரிந்து உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த 120 ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழப்பு: இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியர்கள் நிலை: உயிரிழப்புகள் 2000ஐ தாண்டியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் நிலை குறித்து பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட மராகேச்சில் உள்ள ரிசார்ட்டில் பணிபுரிந்த இந்தியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், அந்த ரிசார்ட் நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது.
மொராக்கோவில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதாக இந்தியத் தூதரகத்தின் ஆலோசகர் நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விளக்கம்: மரகேச்சில் நட்சத்திர ரிசார்ட்டை நடத்தும் ஓபராய் குழுமமும் அதன் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் ரிசார்ட்டில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.. எங்கள் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்குத் தான் நாங்கள் உட்சபட்ச முன்னுரிமை தருகிறோம்.. இப்போது அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
மொராக்கோவில் மிக பெரிய ரிசார்ட்களில் ஒன்றை ஓபராய் குழுமம் மராகேச் என்ற பகுதியில் நடத்தி வருகிறது. சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் இது 84 ரூம்கள் மற்றும் வில்லாக்களைக் கொண்டுள்ள இந்த ரிசார்ட் கடந்த 2019ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. மொராக்கோவுக்கு வரும் ஐரோப்பியப் பயணிகள் பெரும்பாலும் இங்கே தங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே இந்தியர்களும் பலர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களும் பாதுகாப்பாக இருப்பதை ரிசார்ட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications