30,000 மக்களை கொன்று குவித்த கொலைகார விமானம்! அமெரிக்கா கைக்கு மீண்டும் போன ராட்சசன்! ஷாக்
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்த 30 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு Skyvan PA-51 எனும் விமானம் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜென்டினாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடுகளுக்கும் அதன் வரலாற்றில் சில கருப்பு பக்கங்கள் இருக்கும். அர்ஜென்டினாவுக்கும் அப்படியான பக்கங்கள் இருக்கிறது. 1976 முதல் 1983 வரை என 7 ஆண்டுகள் இந்நாட்டில் என்ன நடந்தது என அப்போது அண்டை நாடுகளுக்கு தெரியாது. அப்படி இந்த 7 ஆண்டுகளில் அங்கு என்னதான் நடந்தது? யார் இதற்கு காரணம்? இதன் நோக்கம் என்ன என்கிற பல்வேறு கேள்விகளுக்கு 1983க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் தெரிய வந்தன.

அதாவது, 1976ம் ஆண்டு அதிபர் இசபெல் பெரோனின் ஆட்சி நடந்து வந்தது. பொதுவாக இந்நாட்டில் இரண்டு ஆட்சிகள் மட்டும் இருக்கும். ஒன்று நடுநிலை என்று சொல்லப்படும் 'பெரோனிஸ்டு' (மித வலதுசாரி) கட்சியின் ஆட்சி மற்றொன்று கம்யூனிஸ்ட்கள் எனப்படும் இடதுசாரிகளின் ஆட்சி. 1976ம் ஆண்டு நடுநிலைவாதியான இசபெல் பெரோன் எனும் பெண்மணி அதிபராக இருந்தார். இந்த நேரத்தில்தான் அமெரிக்காவின் உதவியுடன் சொந்த நாட்டு ராணுவமே இவருக்கு எதிராக திரும்பியது.
நாடாளுமன்றம் முழுவதுமாக முடக்கப்பட்டது. அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள இடதுசாரிகள் மற்றும் பெரோனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். இதற்கு ராணுவம் வைத்த பெயர், 'தேசிய மறுசீரமைப்பு செயல்முறை'. ஆனால் அமெரிக்கா இதனை திட்டமிட்டுதான் செய்து வந்திருக்கிறது. அதாவது தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரிகளை அழிக்க அமெரிக்கா ஒரு விரிவான திட்டம் தீட்டியது. இதற்கு அமெரிக்கா இட்ட பெயர் 'ஆபரேஷன் காண்டோர்'. இப்படியாக அர்ஜெண்டினா ராணுவத்தை தூண்டி விட்டு ராணுவ ஆட்சி உருவாக்கியது.
அர்ஜென்டினா ராணுவத்திற்கு ஆயுத உதவி உட்பட அனைத்தையும் அமெரிக்க முன்னின்று செய்தது. நாட்கள் ஆக ஆக காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் மனித உரிமைக்கான போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர்.

மறுபுறம் பொருளாதாரம் பலம் இழக்க தொடங்கியது. பொருளாதாரம் இல்லை என்பதால் அனைத்து தரப்பு மக்களும் வேலையிழந்து, வருவாய் இழந்து வறுமையின் பிடியில் தள்ளப்பட்டனர். எனவே ஒட்டுமொத்த நாடே போராட்டங்களை நோக்கி நகர்ந்தது. மறுபுறம் அர்ஜென்டினா ராணுவம் பால்க்லாந்து தீவை கைப்பற்றியது. இது பிரிட்டனின் கோபத்தை தூண்டியது. எனவே அர்ஜென்டினா பிரிட்டனுக்கு எதிராக போரை அறிவித்தது. இது எல்லாமும் சேர்த்து ராணுவத்தை பலவீனப்படுத்தியது.
ஒரு வழியாக 1983க்கு பின்னர் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர்தான் நாட்டில் எத்தனை பேர் காணாமல் போயினர் என கணக்கெடுக்கப்பட்டது. அப்போது வெளியான தகவல் அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது 30,000லிருந்து 60,000 பேரை ராணுவம் கொலை செய்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல்.
இவர்களின் பெரும்பாலானோர் ரியோ டி லா பிளாட்டா ஆறு மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் விமானங்களில் ஏற்றப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அங்கிருந்து தூக்கி வீசப்படுவார்கள். இப்படி வீசப்பட்டவர்களில் யாரும் பிழைக்கவில்லை. இதற்கு பயன்படுத்தப்பட்ட விமானம்தான் Skyvan PA-51. இந்த விமானத்தைதான் அமெரிக்கா இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
இந்த படுகொலையில் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், Skyvan PA-51 விமானத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து அர்ஜென்டினா அரசு இதனை அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்தது. இது குறித்து பேசிய அந்நாட்டின் நிதியமைச்சர் செர்ஜியோ மாஸா, "வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications