மாணவர்கள் புரட்சி- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா- நாட்டை விட்டு ஓட்டம்- இந்தியாவில் தஞ்சம்
டாக்கா: வங்கதேச மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு தப்பி வெளியேறி இருக்கிறார். வங்கதேசத்தை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் அல்லது திரிபுராவில் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது.
வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருமாறியது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் வங்கதேசம் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் மாணவர்கள் புரட்சி வெடித்தது. மாணவர்களின் இடைவிடாத போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததால் பாதுகாப்பு படையினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்க முயன்றனர். இதில் மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ரத்த வெள்ளத்தில் வங்கதேசம் தகித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கதேச ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.
#BREAKING : Bangladesh PM Sheikh Hasina has left Dhaka for 'safer place.#BangladeshViolence #Bangladesh #BangladeshBleeding #SheikhHasina pic.twitter.com/zTQ33hvNVZ
— upuknews (@upuknews1) August 5, 2024
இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாடு ஒன்றுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
அதற்கு மதிப்பளித்து வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாடு ஒன்றுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஷேக் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவும் வங்கதேசத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications