மரண ஓலத்திற்கு நடுவே மொராக்கோ.. பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 2800ஐ தாண்டியது! நிலைமை ரொம்ப மோசம்
ரபாத்: மொரோக்கோவில் மிக மோசமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. அங்கே மீட்புப் பணிகள் 3 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் குட்டி நாடான மொராக்கோவின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். இந்த சின்ன நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 11 மணிக்கு இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் அங்குள்ள முக்கிய சுற்றுலா நகரான மராகேச் என்ற நகரில் இருந்து 72 கிமீ தொலைவில் தென்மேற்கே ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான பூகம்பத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. மேலும், மொராக்கோவில் இவ்வளவு வலுவான நிலநடுக்கம் கடந்த பல ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டதே இல்லை.. இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் அப்படியே சரிந்து விழுந்தன. இதுவே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகக் காரணமாக அமைந்தது.
மொராக்கோவின் முக்கிய நகரங்களான ரபாத், காசாபிளாங்கா, எஸ்ஸௌயிரா எனப் பல இடங்களில் பாதிப்பு மோசமாக இருந்துள்ளது. 3 நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இப்போது மீட்புப் பணிகளில் மொராக்கோவுடன் ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளது. இன்று செப்.12ஆம் தேதி காலை வரை இந்த நிலநடுக்கத்தில் 2862 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,562 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதால் உயிர் பிழைத்தோரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல மலைக் கிராமங்கள் நிலநடுக்கம் காரணமாக முற்றிலும் நாசமடைந்துள்ளது. சில இடங்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications