தீவிரமடையும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்! யாருக்கு லாபம்? சைலன்டாக வேலை பார்க்கும் 'வல்லரசு'
காசா: பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தற்போது வரை இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளது. இவ்வளவு ஆபத்தை ஏற்பத்தும் போரினால் யாருக்கு லாபம்? யார் பயனடைகிறார்கள்? எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.
பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சுமார் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதிக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்கும் இணைப்பை இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காசாவில் உள்ள ஆம்புலன்ஸ்களில் எரிபொருள் இல்லை.
ஏற்கெனவே நடந்துக்கொண்டிருக்கும், ரஷ்யா-உக்ரைன் போர், அதனைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் ஆகியவை உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. போரில் யார் வென்றாலும், அந்த கொண்டாட்ட சத்தங்களை விட தனது மகனை பறிகொடுத்த தாயின் அழுகை சத்தமே வீரியமானதாக இருக்கும். இப்படி இருக்கையில் ஏன் போர்கள் நடைபெறுகின்றன? இதனால் பயனடைபவர்கள் யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
போர்களுக்கு அடிப்படை என்பது ஆயுதங்கள்தான். இந்த ஆயுதங்களை எல்லோராலும் உற்பத்தி செய்துவிட முடியாது. சில குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் இதை உருவாக்க முடியும். அப்படியான நிறுவனங்கள்தான் லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ராப் க்ரம்மன். இவை இரண்டும் அமெரிக்காவை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களாகும். ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குசந்தை வர்த்தகமும் டாப்பில் சென்றுக்கொண்டிருக்கிறது. லாக்ஹீட் மார்ட்டின் பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவிகிதமும், நார்த்ராப் க்ரம்மன் பங்குகள் சுமார் 12 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.
ஹோம்லேண்ட் செக்யூரிட்டி நியூஸ் வயரின் அறிக்கையின்படி, கடந்த 2009ம் ஆண்டு முதல், சுமார் 169 நாடுகளுக்கு 444 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவில் ஆயுத விற்பனையை அமெரிக்கா செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதில் லாக்ஹீட் மார்ட்டின் மட்டும் 100 பில்லியன் டாலர்களுக்கும் (ரூ.83 லட்சம் கோடி) அதிகமான சந்தை மூலதனத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் ஆயுதங்களை தவிர F-35 போர் விமானங்கள், சிகோர்ஸ்கி மற்றும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. எல்லா போர்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

மற்றொருபுறம் நார்த்ரோப் க்ரம்மன் 70 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மூலதனத்தை கொண்டிருக்கிறது. தற்போதைக்கு ஆயுத உற்பத்தி சந்தையில் இந்த இரண்டு நிறுவனங்கள்தான் கொடிகட்டி பறக்கின்றன. தைவான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களுக்கு இந்த ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா நாடு ஆயத ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பிரான்ஸும், மூன்றாவதாக ரஷ்யாவும் இருக்கிறது.
இன்றைய நிலையில் காலநிலை மாற்றம் வேகம் எடுத்திருக்கிறது. ஆயுத விற்பனையும் இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் காலநிலை மாற்றம் உச்சமடைந்து பூமியின் தென் துருவத்தில் உள்ள பனி வேகமாக அழிந்துவிடும். எனவே ஆயுத விற்பனை நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் மொத்த ஆயுத விற்பனையில் வல்லரசு நாடான அமெரிக்க நிறுவனங்களின் பங்கு மட்டும் 51%ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications