ரத்தக்களறியை தவிர்க்கவே வெளியேறினேன்.. ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி உருக்கம்
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் ரத்தக்களறியை தவிர்ப்பதற்காகவே நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
நேற்றைய தினம் தலைநகர் காபூலில் நுழைந்த தலிபான்கள் அதிபர் அஷ்ரப் கானியை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

தப்பிய அதிபர்
இவர் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஒரு பக்கம் பயங்கர ஆயுதங்களுடன் தலிபான்கள், மறுபக்கம் 20 ஆண்டுகளாக இந்த நாட்டை காக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்த நாட்டை விட்டு செல்வது என்ற இரு கடினமான முடிவுகள் என் முன் வைக்கப்பட்டது.

நாட்டை விட்டு வெளியேறினேன்
ரத்தக்களறியை தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். கடந்த சில ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரில் இன்று வரை ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துவருகிறார்கள். அது போல் காபூலிலும் தலிபான்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் 60 லட்சம் மக்களுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

உருவான தலிபான்கள்
என்னை அகற்றுவதற்காகவே தலிபான்கள் உருவாகியுள்ளனர். காபூலையும் அங்கு வசிக்கும் மக்களையும் தாக்கவே அவர்கள் இங்கு வந்துள்ளார்கள். பயங்கர ஆயுதங்கள் மூலம் காபூலை கைப்பற்றியதால் தலிபான்கள் வென்றுவிட்டதாக கருதுகிறார்கள். ஆனால் இனிதான் அவர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கிறது.

நாட்டின் மரியாதை
நாட்டின் பெருமை, மரியாதை, செல்வம் உள்ளிட்டவற்றை காப்பதில் அவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இது போல் ஆயுதங்களின் முனையில் பிடிக்கப்படும் அதிகாரம் எப்போதும் அவர்களுக்கு கை கொடுக்காது. இதை வரலாற்றில் பார்த்துள்ளோம். ஆப்கானிஸ்தானின் அனைத்து மக்கள், தேசங்கள், பல்வேறு துறைகள், சகோதரிகள், பெண்கள் ஆகியோரின் இதயங்களை வெல்வது என்பது தலிபான்களுக்கு அவசியமாகிறது.

பகிர வேண்டும்
ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கி அதை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது அறிவாற்றலை கொண்டு என் நாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுவேன். அது போல் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார். அஷ்ரப் கானி இந்த விளக்கத்திலும் தான் எங்கிருக்கிறார் என்பதை அறிவிக்கவில்லை.
Recommended Video

அமெரிக்கா செல்கிறாரா அஷ்ரப்?
அவர் தனி விமானம் மூலம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஓமனில் உள்ள அமெரிக்க விமான நிலையத்திற்கு அவர் வந்ததாகவும் விரைவில் அவர் அமெரிக்காவுக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications