‛பஹல்காம் 2 தாக்குதல்".. டெல்லி கார் வெடிப்பை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்.. அப்படியே நடந்து இருக்கே!
லக்னோ: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் டெல்லி கார் வெடிப்பு தாக்குதலை முன்கூட்டியே ஜோதிடர் பிரசாந்த் கினி கணித்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டு இருந்த பதிவு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே டிசம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போர்ச்சூழல் வர வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மாலையில் செ்னறன ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் இறந்தனர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்கூட்டியே கணித்த ஜோதிடர்
இந்நிலையில் தான் டெல்லி கார் வெடிப்பு தாக்குதல் தொடர்பான முன்கூட்டியே ஜோதிடர் ஒருவர் கணித்து கூறிய பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த ஜோதிடரின் பெயர் பிரசாந்த் கினி. இவர் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்தார். அதில், ‛‛பஹல்காம் 2 வரும் 2025 நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நடக்கும்'' என்று கூறியிருந்தார்.
அப்படியே நடந்துள்ளது
இது அப்படியே நடந்துள்ளது. தற்போது நவம்பர் 11ம் தேதி டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 காரை டாக்டராக இருக்கும் உமர் என்பவர் ஓட்டி சென்றதும், கார் வெடித்ததில் அவரும் இறந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ‛உபா' சட்டத்தில் வழக்குப்பதிந்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது.
Pahalgam-2 will happen in November/ December 2025..
— Prashanth Kini (@AstroPrashanth9) August 20, 2025
இந்தியா எப்போது பதிலடி கொடுக்கும்?
இதனால் ஜோதிடர் பிரசாந்த் கினியின் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளது. இதையடுத்து பலரும் அவரிடம் எக்ஸ் பக்கத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.அதன்படி பலரும், ‛‛இந்தியா எப்போது பதிலடி கொடுக்கும்?'' என்று கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
ஜோதிடரின் பதில்
இதுபற்றி பிரசாந்த் கினி, ‛‛என்னை பின்தொடர்பவர்களில் பலரும் மீண்டும் எப்போது இந்தியா - பாகிஸ்தான் போர் வரும் என்று கேட்கின்றனர். அடுத்தடுத்து நடக்கும் சில விஷயங்களால்2025 டிசம்பர் 3வது வாரத்தில் போர் போன்ற நிலை வரலாம்'' என்று கூறியுள்ளார். டெல்லி கார் வெடிப்பில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதனால் தான் பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எப்போது தாக்கும். டெல்லி தாக்குதலுக்கு எப்போது பதிலடி கொடுக்கும் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு டிசம்பர் 3வது வாரத்தில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் போன்ற சூழல் வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பஹல்காமில் என்ன நடந்தது?
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அங்கு சுற்றுலா சென்றவர்களில் 26 பேர் இறந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மே 7 ம் தேதி தொடங்கி பாகிஸ்தானை பதம் பார்த்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமான தளங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டது. அடித்த அடியில் பாகிஸ்தான் நம் நாட்டிடம் போரை நிறுத்தும்படி கெஞ்சியது. அதன்பிறகு தான் இந்த ‛அட்டாக்' நிறுத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் 2.O
இருப்பினும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்த நம்மை சீண்டி வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ‛ஆபரேஷன் சிந்தூர் 2.O வை தொடங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கிடையே தான் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடர்பு உறுதியாகும் பட்சத்தில் நம் நாடும் உரிய முறையில் பதிலடி கொடுக்கலாம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ‛அட்டாக்' செய்யலாம். இதனால் தான் இந்த ஜோதிடர் பிரசாந்த் கினி மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே டிசம்பர் 3வது வாரத்தில் போர் சூழல் வரலாம் என்று கணித்துள்ளார்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications