Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹஜ்: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 717 ஆக உயர்ந்தது - 805 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: சவுதியில் புனித மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

At least 227 Dead, 500 Hurt in Stampede During Haj in Saudi Arabia, Say Officials

மெக்காவில் இருந்து புனித யாத்திரை மேற்கொண்ட பல லட்சம் இஸ்லாமியர்கள், மினா நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மினாவில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டனர்.

சாத்தான் மீது கல் எறிவதாக நினைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி யாத்ரீகர்கள் கற்களை எறிவார்கள். இதற்காக நேற்று கற்களை பொறுக்கி வைத்தனர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 717 பேர் இறந்துள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மினாவில் சாத்தான் மீது கல்லெறியும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. நெரிசலை

At least 227 Dead, 500 Hurt in Stampede During Haj in Saudi Arabia, Say Officials

தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் யாத்ரீகர்கள் முண்டியடிப்பதால் நெரிசல் ஏற்பட்டு பலர் பலியாகி வருகிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு மினா நகரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி அதிகபட்சமாக 360க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கடந்த 12ம் தேதி மெக்கா பெரிய மசூதி வளாகத்தில் கிரேன் விழுந்து கட்டிடம் இடிந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் மெக்கா அடுத்தடுத்து இரண்டு பெரிய விபத்துக்களைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+