ஈராக்: ஐஸ் கிரீம் பார்லரில் கார் குண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல்... 13 பேர் பலி
ஈராக்கில் ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்: ஈராக்கில் ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ராணுவ தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். ஏராளமானோர் கை கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றின் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் திடீரென வெடித்து சிதறியதில் ஐஸ் க்ரீம் பார்லரில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள அவர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் இன்று இரவு குழந்தைகள், குடும்பங்கள் கூடும் ஐஸ் க்ரீம் பார்லரை குறி வைத்துள்ளனர். நாங்கள் ஈராக்குக்கு எதிரானவர்கள் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே ஈராக்கின் கராடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications