கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்.. 36 பேர் பலி.. 60 பேர் படுகாயம்
ஆதென்ஸ்: கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த கோரவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிரீஷ் நாட்டு நேரப்படி செவ்வாய் கிழமை இரவு லரிசா என்ற நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது.

விபத்தின் கோரம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகள் துண்டாக உடைந்து விழுந்து நொறுங்கி கிடக்கின்றன. ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ரயில் விபத்தில் தாங்கள் உறவினர்கள் யாரேனும் பிழைத்துள்ளார்களா என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க தேடும் காட்சிகள் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், "ரயில் பெட்டிகளுக்குள் படுகாயத்துடன் இருந்த சிலரை நாங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்டோம் . அதில் சிலர் படுகாயம் அடைந்திந்தனர். இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்" என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் கூறினார். ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.
விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவர்கள் விபத்து குறித்து கூறும்போது, "விபத்து நடந்தபோது ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் திடீரென வெடித்து சிதறியது, அதன்பிறகு இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோம்" என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications