காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக ஆஸி.யில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்
மெல்போர்ன்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை ஆஸ்திரேலியா புறக்கணிக்க வேண்டுமென்று கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் கலந்துகொள்ளும் நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள நிலையில் இம்முடிவைப் பரிசீலிக்கும்டி வேண்டி இப்போராட்டம் 'தமிழர் நீதிக்கான அமைப்பால்' முன்னெடுக்கப்படுகின்றது.

கனடாவில் வாழும் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்த நாட்டுப் பிரதமர் மாநாட்டை புறக்கணித்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. இதேபோல் ஈழத்தமிழர்கள்மீது பெருமளவிலான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட சிங்களப்பேரினவாதத்தின் தலைநகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை ஆஸ்திரேலிய அரசாங்கமும் புறக்கணிக்கவேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டையே ஆஸ்திரேலிய வாழ் தமிழ்மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் சில அரசியற் கட்சிகளும் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா வாழ் தமிழ்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டை ஆஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாகக்கொண்டு விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்ன் நகரில் வரும் 11-11-2013 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் விக்டோரியா மாநிலத்தின் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களால் நடாத்தப்படவுள்ளது.
ஆகவே விக்டோரியா மாநிலத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் இந்த கவனயீர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துமாறு அன்புடனும் உரிமையுடனும் அழைக்கப்படுகின்றார்கள்.
கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெறவுள்ள இடம்:
State Library of Victoria
Corner of Swanston and Latrobe Street.
Melbourne Central Train Station
நேரம்: மாலை 4 மணி.
மேலதிக தொடர்புகளுக்கு: 0404 802 104, 0404 894 591
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications