9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலை.. வயிற்றுக்குள் பார்த்தால்.. ஆ.. 'ஷாக்' ஆன ஆராய்ச்சியாளர்கள்
கான்பெர்ரா: 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் எலும்புக் கூட்டை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதன் வயிற்றுக்குள் டைனோசரின் எலும்புப் படிமங்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இறப்பதற்கு முன்பு ஒரு சிறிய அளவிலான டைனோசரை அந்த முதலை உணவாக்கி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலை வகைகளிலேயே இது வித்தியாசமானது என்றும், இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சி செய்தால் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்..
உலகில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில உயிரினங்கள் பரிமாண வளர்ச்சி அடைந்து நம் மத்தியில் இருக்கின்றன. இதுபோன்று பல லட்சம் அல்லது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை நமக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அகழ்வாராய்ச்சிகள் தான். இப்படி உலகின் பல இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் அவ்வப்போது உலகையே திரும்பிப் பார்க்கும் கண்டுபிடிப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு கண்டுபிடிப்பு தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த அகழ்வாய்வு..
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்ததால் அங்கு பழங்காலத்தில் கடலில் வாழ்ந்த உயிரினங்களின் எலும்புகள் அல்லது படிமங்கள் கிடைக்கும் என்பதால் அங்கு அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அதன்படியே பல பழங்கால மீன்கள் மற்றும் உயிரினங்களின் எலும்புப் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து வந்தனர்.

9 கோடி ஆண்டுகளுக்கு முன்..
அப்படி நடந்த ஆராய்ச்சியில்தான் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ராட்சத முதலையின் எலும்புக் கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கப்பெறாத முதலையாக இது இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும், 10 அடி நீளமுள்ள அந்த முதலையின் வயிற்றுக்குள் மற்றொரு விலங்கின் எலும்புப் படிமங்களும் இருந்தன. இதையடுத்து, அந்த எலும்பு படிமங்களை கம்ப்யூட்டர், சிடி ஸ்கேன் கொண்டு ஆராய்ச்சி செய்த போது அது டைனோசரின் எலும்பு என்பது தெரியவந்தது.

ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்..
அதாவது இறப்பதற்கு முன்பு ஒரு டைனோசர் குட்டியை அந்த முதலை சாப்பிட்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த முதலையும் கொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த விலங்கு அந்த முதலையை கொன்றது எனத் தெரியவில்லை. தோராயமாக, அந்த குட்டி டைனோசரின் தாய் அந்த முதலையை கொன்றிருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், கண்டெடுக்கப்பட்ட அந்த முதலையின் எலும்புக் கூட்டில் வால் இல்லை. எனவே, குட்டி டைனோசரை சாப்பிட்ட பின்னர் நடந்த மோதலில் முதலை இறந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த முதலையின் எலும்புக் கூடு தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 'ஏஜ் ஆஃப் டைனோசர்ஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications