ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல்... வாக்குப் பதிவு தொடக்கம்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையால் கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி வகித்து விட்டனர். ஆளும் சுதந்திர தேசிய கூட்டணியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கடந்த ஆண்டு டோனி அப்பாட் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்றுக் கொண்டார். அரசியல் குழப்பங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு சபை களையும் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தும்படி பிரதமர் மால்கம் டர்ன்புல் பரிந்துரைத்தார்.
இதன் அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கீழ் சபையின் 150 உறுப்பினர்கள் உட்பட 226 உறுப்பினர்கள் இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
இதற்காக மொத்தம் 55 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் சுமார் 1.5 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இதற்காக நாடு முழுவதும் 7,000 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் சுதந்திர தேசிய கூட்டணியின் வேட்பாளரும், பிரதமருமான மால்கம் டர்ன்புல்லுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் பில்ஷார்டனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் பதவியேற்கும் 5-வது பிரதமராக ஷார்டன் இருப்பார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications