ஒரேயொரு கிஸ்தான்.. மொத்த ப்ராஜெக்ட்டும் காலி! சீனாவின் சிசிடிவி கேமராக்களுக்கு.. ஆஸ்திரேலிய அரசு தடை
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சம்பவத்தையொட்டி அப்போதைய பாதுகாப்புத்துறை செயலாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்
கேன்பெரா: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தங்களது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களில் உள்ள சீன நிறுவனத்திற்கு சொந்தமான சிசிடிவி கேமிராக்களை அகற்ற இருப்பதாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் ஏற்றுமதியாகாத நாடுகளே இல்லையென்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஏற்றுமதி சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா, சீனாவின் சில தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது.
கடந்த 2020ம் ஆண்டு 'ஹவாய்' சர்ச்சையை அமெரிக்கா கையில் எடுத்தது. அதன்படி இனி ஹவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அமெரிக்காவில் இந்நிறுவனம் செமிகண்டக்டர்களை உருவாக்க கூடாது என உத்தரவிட்டது. இது சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டது. சீனா தனது நிறுவனங்கள் மூலம் உளவு பணிகளில் ஈடுபடுகிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

ஆஸ்திரேலியா
ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஹவாய் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவால் அந்நிறுவனம் கடும் அதிருப்தியடைந்தது. இதனையடுத்து இந்தியா, சீனா தொடர்பான செயலிகளை தடை செய்தது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்திருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்னர் சீன நிறுவனத்தின் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த மட்டோம் என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. இந்த கேமிராக்கள் மூலம் உளவு பார்க்க வாயப்பிருப்பதால் அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் இந்த கேமிராக்களை நிறுவ அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.

பிரிட்டன்
இதனையடுத்து பிரிட்டனும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 67 மேலவை உறுப்பினர்களும் சீன சிசிடிவி கேமிராக்ககள் குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், அரசு அலுவலகங்கள் மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து சீன கேமிராக்கள் அகற்றப்படும் எனவும், இனி புதியதாக நிறுவும் கேமிராக்கள் சீன நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்காது என்றும் அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இதையேதான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறுகையில், இதனையடுத்து பிரிட்டனும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 67 மேலவை உறுப்பினர்களும் சீன சிசிடிவி கேமிராக்ககள் குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், அரசு அலுவகங்கள் மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து சீன கேமிராக்கள் அகற்றப்படும் எனவும், இனி புதியதாக நிறுவும் கேமிராக்கள் சீன நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்காது என்றும் அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இதையேதான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறுகையில்,

சீன சிசிடிவி கேமிராக்கள்
"சீன நிறுவனங்களின் கேமிராக்களை ஆஸ்திரேலிய அரசு தனது அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் பொருத்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்களை சீன அரசு மிரட்டி கேமிராக்களில் பதிவான சில முக்கியமான தகவல்களை கேட்டு பெறாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? எனவ இந்த சந்தேகம் காரணமாக நாங்கள் சீன நிறுவனங்களின் கேமிராக்களை அகற்ற இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை கட்டிடம் உட்பட சுமார் 200 அரசு கட்டிடங்களில் சீன நிறுவனத்தின் கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பையடுத்து கேமிராக்கள் விரைவில் அகற்றப்படலாம். "சீன நிறுவனங்களின் கேமிராக்களை ஆஸ்திரேலிய அரசு தனது அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் பொறுத்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்களை சீன அரசு மிரட்டி கேமிராக்களில் பதிவான சில முக்கியமான தகவல்களை கேட்டு பெறாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? எனவ இந்த சந்தேகம் காரணமாக நாங்கள் சீன நிறுவனங்களின் கேமிராக்களை அகற்ற இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை கட்டிடம் உட்பட சுமார் 200 அரசு கட்டிடங்களில் சீன நிறுவனத்தின் கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பையடுத்து கேமிராக்கள் விரைவில் அகற்றப்படலாம்.

அதிருப்தி
ஆஸ்திரேலிய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் Hikvision மற்றும் Dahua ஆகிய சீன நிறுவனங்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. ஏனெனில் இந்த நிறுவனத்தின் கேமிராக்களைதான் ஆஸ்திரேலிய மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரு நிறுவனங்களையும் ஏற்கெனவே அமெரிக்க அரசு பிளாக் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய சுகாதாரச் செயலர் மாட் ஹான்காக் அவர் உதவியாளருக்கு முத்தம் ஒன்றை கொடுத்திருக்கிறார். முத்தம் கொடுத்தது பிரச்சனையில்லை, ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலம் அது.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
எனவே ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பின்பற்றப்பட்டு வந்திருந்த நிலையில் இந்த முத்தக்காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி பின்னர் அது வெளியில் தெரிந்து பெரும் பஞ்சாயத்தை கூட்டியது. இதில் விஷயம் என்னவெனில் அந்த சிசிடிவி சீனாவை சேர்ந்த Hikvision நிறுவனத்தினுடையதாகும். ஆகவே இந்த பிரச்னைகளை பேசி Hikvision நிறுவனம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சித்தரிப்பது தவறானது என Hikvision நிறுவனம் கூறியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications