ஒரே ஆணை திருமணம் செய்து ஒரே நேரத்தில் முதலிரவு நடத்திய இரட்டை சகோதரிகள்
மெல்பர்ன்: வாழ்க்கையில் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே நபரை திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள் ஒரே படுக்கையில் முதலிரவையும் முடித்துவிட்டனர். திருமணத்துக்கு முன்பு ஆண் நண்பர்களையும் ஷேர் செய்துகொண்டுள்ளதாக பெருமையோடு தெரிவிக்கிறார்கள் இந்த சகோதரிகள்.

ஒரே போன்ற தோற்றம்
ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அன்னா மட்டும் லூசி. இருவருமே உருவத்தில் ஒரே போல இருப்பார்கள். அன்னாவுக்கு கன்னத்தில் சிறு மச்சம் உள்ளது. அதை வைத்துதான் பெரும்பாலானோருக்கு நாம் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியுமாம்.

இணை பிரியாமல் இருக்க சபதம்
இருவருமே தாங்கள் வாழ்நாள் முழுவதும், இணைபிரியாமல் இருக்க ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் வாழ்ந்து வந்தனர். அதன்படி தங்கள் நாட்டை சேர்ந்த பைமி (31) என்பவர் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இரு தரப்புக்கும் பிடித்திருந்ததால் சமீபத்தில் சகோதரிகள் இருவரையும் பைமி திருமணம் செய்து கொண்டார்.

ஒரே படுக்கையில் முதலிரவு
சகோதரிகள் இருவரும் ஒரே படுக்கையில் தங்கள் முதலிரவை நடத்தியுள்ளனர். இதை பெண்களுக்கான பத்திரிகையொன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியால் ஆஸ்திரேலியாவே ஆடிப்போய் கிடக்கிறது. கண்டன குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

காதலர்களை மாற்றியுள்ளோம்
இதுகுறித்து சகோதரிகள் கூறுகையில், திருமணத்துக்கு முன்பு எங்களுக்கு பாய்ஃபிரண்டுகள் இருந்தனர். அப்போதே ஆட்களை மாற்றிக்கொண்டு நாங்கள் டேட்டிங் செல்வோம். அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. காதலர்கள் போன் செய்தால்கூட குரலை மாற்றிக்கொண்டு பேசுவோம், காதலர்களால் கண்டுபிடிக்க முடியாது.

ரசனை ஒத்துப்போயுடுச்சில்ல..
மச்சம் உள்ளிட்ட சிறு அடையாளங்களை வைத்து எங்களை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக 2 லட்சம் டாலர் செலவில் இருவரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி ரசனை இருப்பதால், காதலர், கணவர் விஷயத்திலும் எங்கள் டேஸ்ட் ஒத்துப்போய்விட்டது. எனவே நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.

ஒற்றுமை, மகிழ்ச்சி இதுவே தாரக மந்திரம்
எங்கள் கணவர் இருவரையும் மிகவும் அன்பாக வைத்துக்கொள்கிறார், இருவரும் ஒரே கணவருடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம், இருவருக்கும் இடையே எவ்வித பேதமும் சர்ச்சையும் இன்றி வாழ்க்கை இனிமையாக செல்கிறது என்று அவர்கள் தங்கள் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications