ஆஹா.. பூரா ரகசியமும் வெளியாக போகுதாமே.. இதோ வந்தாச்சு 6 கேலக்ஸிகள்.. அசத்திய ஜேம்ஸ் வெப்.. என்னவாம்
முதலில் ஆராய்ச்சியில் ஏதோ தவறு நடந்துவிட்டதாக நினைத்துள்ளனர். பின்னர்தான் தாங்கள் கண்டுபிடித்தது பெரிய விஷயம் என்று புரிந்திருக்கிறது.
கேன்பெரா: ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் 6 'மான்ஸ்டர் கேலக்ஸிகளை' கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது குறித்த ரகசியங்கள் விரைவில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் மனிதனுக்கு என்ன தேவை? என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பசித்த மனிதனிடம் கேட்டால் உணவு என்பான், குளிர் இருக்கும் மனிதனிடம் கேட்டால் வீடு என்பான் சரி இப்படி எல்லா அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிய பின்னரும் மனிதனுக்கான தேவையென ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு 'ஆம் மனிதனுக்கு இன்னமும் தேவை இருக்கிறது' என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்விதான் எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இந்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதுதான் ஜேஸ்ம் வெப் தொலைநோக்கி.

பிக் பேங்
இந்த பிரபஞ்சம் 'பெரு வெடிப்பு' (Big Bang) எனும் நிகழ்வுகளுக்கு பின்னர்தான் பிறந்திருக்கிறது என்றும், அதன் பின்னர் மெல்ல உருவானதுதான் சூரிய குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதர்கள் எல்லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே பெரு வெடிப்பு நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த தகவல்களை பார்த்த விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று நினைத்துள்ளனர். ஆனால் அதன் பின்னர்தான் தாங்கள் கண்டுபிடித்திருப்பது மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் வெப் எனும் ஹீரோ
ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பேர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மிக பிரகாசமாக ஏதோ கண்களில் அகப்பட்டிருக்கிறது. அதிக வெளிச்சம் கொண்ட சூரியனாக இருக்கும் என்று நினைத்து அதனை தவிர்த்துள்ளனர். விஞ்ஞானிகள் தேடியது சிறிய கேலக்ஸிகளை. அதாவது பெரு வெடிப்பு நடந்த பின்னர் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கேலக்ஸிகள் எனப்படும் நட்சத்திர திரள்கள் உருவாகி இருக்கும். ஆனால் அவை சிறிய அளவில்தான் இருக்கும் என்று நினைத்து தேடியுள்ளனர்.

எதிர்பாராத கண்டுபிடிப்பு
ஆனால், கடைசிவரை எதுவும் கண்ணில் அகப்படவேயில்லை. பின்னர், சரி கிடைத்த படங்களை ஆய்வு செய்வோம் என்று பார்த்ததுபோதுதான் ஆச்சரியத்தில் வாயடைந்துபோயுள்ளனர். அதாவது இவர்கள் சேகரித்த படங்களில் அதிக வெளிச்சமாக பதிவாகியிருந்த புள்ளிகள் அனைத்தும் புதிய கேலக்ஸிகள், அதுவும் பிரமாண்ட கேலக்ஸிகள். பிரமாண்டம் என்றால் எந்த அளவு எனில், புதிய கேலக்ஸிகளில் உள்ள சூரியன்கள் நம்முடைய சூரியன்களை விட சுமார் மில்லியன் மடங்கு பெரியதாகும். நம்முடைய சூரிய குடும்பத்தில் 8 கோள்கள், ஏராளமான துணை கோள்கள், லட்சக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் சூரிய குடும்பத்தின் அளவில் 99.9 சதவிகிதத்தை சூரியன்தான் இருக்கிறது.

எதுக்கு இந்த ஆய்வு?
நம்முடைய சூரியனே இவ்வளவு பெரியது எனில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளின் சூரியன்கள் இதைவிட கோடிக்கணக்கான மடக்கு பெரியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தம் பெரு வெடிப்பு நிகழ்ந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்கு உருவானவையாகும். அதாவது குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டால் எப்படி இருக்குமோ, அதைதான் ஜேம்ஸ் வெப் எடுத்து கொடுத்திருக்கிறது. சரி இதெல்லாம் கண்டுபுடுச்சு என்ன யூஸ் இருக்க போகுது? என்று நாம் மக்கள் கேட்கலாம். மேற்குறிப்பிட்டதப் போல நாம் யார்? எதற்காக இங்கு இருக்கிறோம்? போன்ற கேள்விகள் நம்முடைய மண்டைக்குள் குடைந்துக்கொண்டே இருக்கதானே செய்கிறது. அக்கேள்விக்கான விடைக்கு நெருக்கமாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கேலக்ஸிகள் நம்மை கொண்டு செல்லும் என்பாதல்தான் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications