படுக்கை வாடகைக்கு! பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதி.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். ஹாட் பெட்டிங் முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் இதனை செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தை சேர்ந்தவர் மோனிக் ஜெரமையா (வயது 37). ஆசிரியையான இவர் கொரோனா பரவலுக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு தொழில் வீழ்ச்சி அடைந்தது.

australian-woman-earns-lakhs-by-renting-out-her-bed-through-hot-bedding

படுக்கையை பகிர்ந்து கொள்ள

ஆசிரியை வேலையும் ஆன்-லைன் கல்விக்கு மாறியதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனால், தனது வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெரமையாவுக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அதாவது ஹாட் பெட்டிங் என்ற ஐடியா வந்துள்ளது.

அதாவது, இந்த ஹாட் பெட்டிங் முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் அமல்படுத்தப்படுகிறது. இப்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள மாதம் 52 ஆயிரம் டாலர் வாடகை கொடுக்க வேண்டுமாம்.

மாதம் 52 ஆயிரம் டாலர் வாடகை

இதனால் அவர் வருமானத்துக்கு புதிய வழி தேடிய போது 'ஹாட் பெட்டிங்' யுக்தியை அறிமுகப்படுத்தினார். இந்த முறையில் 2 நபர்கள் ஒரே படுக்கையில் தூங்கினாலும் முழுமையாக நட்பு மற்றும் ஒழுக்கத்தை கொண்ட ஒப்பந்தமாகவே இது அமைகிறது. இவ்வாறு படுக்கையில் பாதியை பகிர்வதற்கு மாதம் 52 ஆயிரம் டாலர் வரை வாடகை நிர்ணயித்துள்ளார்.

இதுதொடர்பாக டிக்-டாக்கில் மோனிக் ஜெரேமியா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது புது பிசினஸ் ஐடியா குறித்து பேசியிருக்கும் ஜெர்மையா, "நட்பை மதித்து, உடல் ரீதியாக எதுவும் தேடாதவர்களுக்கு இது சிறந்த ஒன்றாக இருக்கும்" என்றார்.

ஹாட் பெட்டிங் என்றால் என்ன?

ஹாட் பெட்டிங் என்பது பல நாடுகளில் காணப்படும் ஒரு நடைமுறைதான். வீடுகள் பற்றாக்குறை, அதிக செலவீனம் ஆகியவை காரணமாக ஒரே பெட்டை ஷிப்ட் முறையில் பகிர்ந்து கொள்ளும் முறை இருக்கிறது.

கப்பல், தொழில்துறை பகுதிகள், ராணுவ முகாம்கள் போன்ற அதிக நெருக்கடியான இடங்களில் வெவ்வேறு ஷிப்ட்களில் பணி செய்பவர்கள் இப்படி ஒரே படுக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் பகிர்ந்து கொள்ளும் முறைதான் ஹாட் பெட்டிங் சென்று சொல்லப்படுகிறது. பணத்தை மிச்சப்படுத்தும் விதமாக இந்த முறை முதலில் தோன்றியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+