நடுவானில் மோதிய விமானம்! அலறி துடித்த இளம்பெண்! அடுத்த செகண்ட் அந்த அதிசயம்! திக்திக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியாவில் பெண் ஒருவர் ஜாலியாக பாராசூட்டில் பறந்து கொண்டு இருந்த சூழலில், சிறிய ரக விமானம் அவரது பாராசூட்டில் மோதியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் நடுவானிலேயே நிலைகுலைந்து போனார். இந்த விபத்து தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நமது வேலையில் உள்ள பரபரப்பான பிரச்சினைகளில் இருந்து விலகி மனசை ரிலாக்ஸ் செய்யத் தான் நாம் விடுமுறைக்குப் போவோம். அங்கு நாம் நமக்குப் பிடித்த வேலைகளைச் செய்வோம். ஆனால், அங்கும் பிரச்சினை வந்தால் எப்படி இருக்கும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Austrian Alps Accident Mid-Air Collision Austria

என்ன நடந்தது!

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒரு பாராகிளைடர் மீது, சுற்றுலாப் பயணிகள் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று அசுர வேகத்தில் மோதியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. நூலிழையில் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய அந்தப் பெண், அந்தரத்தில் சுழன்றவாறே அவசரக்கால பாராசூட்டை விரித்துச் சாதுரியமாக உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வடக்கு ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற பாராகிளைடிங் தலமான ஷ்மிட்டன்ஹோஹே (Schmittenhohe) மலைப் பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 44 வயதான சப்ரினா என்ற அனுபவம் வாய்ந்த பாராகிளைடர் பெண், தனது ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்திவிட்டு ஜாலியாக விண்வெளியில் பறந்து கொண்டிருந்தார்.

விபத்து

அப்போது எதிர்பாராத விதமாக 28 வயது இளைஞர் ஓட்டிவந்த ஒரு சிறிய ரகச் சுற்றுலா விமானம், சப்ரினாவின் தலைக்குச் சற்று மேலே அவரது பாராகிளைடர் மீது மிக மோசமாக மோதியது. விமானத்தின் இறக்கைகள் பலமாக மோதியதால், சப்ரினாவின் பாராகிளைடர் அப்படியே நடுப்பகுதியில் இரண்டாகப் பிளந்து முற்றிலும் சிதைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சப்ரினா, தலைகீழாகப் பூமி நோக்கி அதிவேகத்தில் சுழன்றவாறே கீழே இறங்கினார்.

மரணம் நிச்சயம் என்ற இக்கட்டான அந்தச் சில நொடிகளில், சப்ரினா அசாத்திய மனவலிமையுடன் தனது அவசரக்கால மாற்றுப் பாராசூட்டை திறந்தார். அது கச்சிதமாக வேலை செய்ததால் அவரது வேகம் குறைந்து, அவர் மெதுவாகத் தரை நோக்கி இறங்கினார். பத்திரமாகத் தரையிறங்கிய சப்ரினா, இது தொடர்பாகத் தகவல் அனுப்பியிருக்கிறார். விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சால்ஸ்பர்க் போலீஸார் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சப்ரினாவை பத்திரமாக மீட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உயிர் தப்பினார்

அதிர்ஷ்டவசமாக சப்ரினா மற்றும் விமானத்தை ஓட்டிய அந்த 28 வயது பைலட் ஆகிய இருவருமே எவ்வித பெரிய காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு போலீசார், "விமானத்தின் மோட்டார் ப்ரொபெல்லர் பாராகிளைடரை மிகக் கடுமையாகச் சேதப்படுத்திய போதிலும், அந்தப் பெண்ணின் அனுபவமே அவரை அவசரக்கால பாராசூட்டைப் பயன்படுத்திக் காப்பாற்றியுள்ளது" என்றனர்.

வீடியோ

மரணக் கிணற்றிலிருந்து மீண்டுவந்துள்ள சப்ரினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விபத்து தொடர்பாக போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர், "உண்மையிலேயே நான் இன்னும் உயிருடன் அமர்ந்துகொண்டு, இந்த விபரங்களை உங்களுக்காக டைப் செய்கிறேன் என்பதை என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை. உடம்பில் ஆங்காங்கே சில மோசமான தழும்புகள் மற்றும் ரத்தக் கட்டுகள் ஏற்பட்டதைத் தவிர, எனக்கு வேறு எந்தவொரு பெரிய ஆபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி!" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+