காதல், கல்யாணம், விவாகரத்து ரீப்பீட்டு! ஒரே நபரை 12 முறை மணந்து, விவாகரத்து செய்த பெண்! ஷாக் காரணம்
வியன்னா: ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும் போது நம்ம ஊரில் விவாகரத்து விகிதம் குறைவாகவே இருக்கிறது. வலுவான குடும்ப பிணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது.

வெளிநாடுகளில் அப்படி இல்லை. சர்வ சாதாரணமாக விவாகரத்துகள் நடக்கும். அங்கு ஒருவரது முதல் திருணம் சுமார் 40-50% வரை விவாகரத்திலேயே முடிகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இதே தான் நிலை. ஆனால், இங்கே ஆஸ்திரியாவில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் 12 முறை விவாகரத்து வாங்கியிருக்கிறார்.
ஆஸ்திரியாவில் வினோதம்:
திருமண வாழ்க்கையில் எதாவது சிக்கல் இருந்து இருக்கும். அதனால் விவாகரத்து வாங்கி இருப்பார் என நீங்கள் சொல்லலாம். உண்மையில் இந்த 12 முறையும் ஒரே நபரைத் தான் திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இடையே அளவு கடந்த காதல் இருந்துள்ளது. ஆனாலும், இருவரும் 12 முறை விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கான காரணம் உங்களுக்கு அதிர்ச்சி தரும்.. அரசின் உதவி தான் இந்த விவாகரத்துக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.
அதாவது ஆஸ்திரியாவில் விதவை மற்றும் விவாகரத்து பெறும் பெண்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெறவே அவர்கள் இத்தனை முறை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளனர். இதன் மூலம் 73 வயதான அந்த பெண், சுமார் 3.42 லட்சம் அமெரிக்க டாலர் (அதாவது சுமார் 2 கோடி ரூபாய்) அளவுக்கு உதவித் தொகையைப் பெற்றுள்ளார்.
எப்படி தொடங்கியது:
இதெல்லாம் 1980களில் தொடங்கியுள்ளது. அதாவது அந்த பெண்ணின் முதல் கணவர் 1981ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருக்கு விதவைக்கான பென்ஷன் வழங்கப்பட்டது. இருப்பினும், 1982இல், அவர் லாரி டிரைவர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், வேறு ஒரு திட்டத்தில் அவருக்கு சுமார் 28 ஆயிரம் டாலர் கிடைத்துள்ளது.
இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு, லாரி டிரைவரான கணவர் தன்னுடன் போதியளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்று சொல்லி அந்த பெண் விவாகரத்து வாங்கியுள்ளார். இதையடுத்து அவரது விதவை உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் வேறு திட்டத்தில் அவருக்கு சுமார் 27 ஆயிரம் டாலர் நிவாரணமாகத் தரப்பட்டது.
12 விவாகரத்துகள்:
இப்படி விவாகரத்து பெறும் போது மாதாமாதம் உதவித் தொகையும், மறுமணத்திற்குப் பிறகு நிவாரண தொகையும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த தம்பதி இதையே செய்யத் தொடக்கியுள்ளனர். கடந்த 35 ஆண்டுகளில் அந்த தம்பதி இப்படியே திருமணம்- விவாகரத்தை மாறி மாறி செய்துள்ளனர். சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த விவாகரத்து செய்துள்ளனர்.
இப்படியே அந்த தம்பதிக்கு மொத்தம் 12 முறை திருமணம் நடந்துள்ளது. கடைசியாகக் கடந்த 2022ம் ஆண்டு அந்த தம்பதி மீண்டும் விவாகரத்து பெற்றனர். இருப்பினும், பென்ஷன் அதிகாரிகள் விதவை உதவித் தொகை வழங்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் தான் அந்த தம்பதி செய்தது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த தம்பதி மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரியா ஜோடி சொல்வது என்ன:
அதாவது அந்த ஜோடி இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்த போதிலும், அவர்கள் உதவித் தொகை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதைச் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த தம்பதி தாங்கள் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறார்கள். செட் ஆகவில்லை என்றே 12வது முறையாக விவாகரத்து பெற்றதாலும், இதை அதிகாரிகள் அங்கீகரிக்க மறுப்பதை ஏற்கவே முடியாது என்றும் கூறுகிறார்கள். மேலும், தங்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications