உலுக்கப் போகும் கொரோனா? ஜூலையில் காத்திருக்கும் பேரழிவு! பதைபதைக்க வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு
டெல்லி: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 'ஜப்பானின் பாபா வங்கா' என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்கதரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மர்ம வைரஸ் உருவாகி மறைந்து 2030 ஆம் ஆண்டில் மீண்டும் மிக மோசமான தாக்கத்துடன் பரவும் என அவர் எழுதியிருந்த நிலையில், முன்னதாகவே வைரஸ் பரவல் அதிகரித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரசின் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்த நிலையில் இருந்த நிலையில், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது மருத்துவத் துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பெல், தற்போதைய கொரோனா வைரஸ் மாறுபாடுகள் வீரியமற்றவை என்பதால், வைரஸ் பாதித்த பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
தற்போது பரவி வரும் வைரஸ் Omicron வகையைச் சேர்ந்ததாகவும், அவை LF.7, XFG, JN.1, NB.1.8.1 எனும் சீரற்ற வகைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் மாறுபாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 'ஜப்பானின் பாபா வங்கா' என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்கதரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
1999ஆம் ஆண்டு "The Future As I See It" எனும் புத்தகத்தை எழுதிய ஜப்பானிய மாங்கா கலைஞரான ரியோ டட்சுகி, 2020ஆம் ஆண்டு ஒரு மர்ம வைரஸ் உருவாகும் என்றும், அது ஏப்ரல் மாதத்தில் குறைந்து மறைந்து விடும் என்றும், 2030ஆம் ஆண்டில் அதே வைரஸ் மீண்டும் மிகவும் மோசமான தாக்கத்துடன் உருவாகி பரவும் என்றும் எழுதியிருந்தார். இதே தீர்க்கதரிசனம் தற்போது பாபா வாங்காவுடைய எதிர்காலக் கணிப்புகளுடன் ஒப்பிடப்பட்டு பரப்பப்படுகிறது. அதன்படி 2030க்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில், வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல அதிகாரித்து வருவதை சுட்டிக் காட்டுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, 2025 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே ஜூலை மாதத்தில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளதும் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பெரும் சுனாமி 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் எனவும், ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு, அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாபா வங்காவின் கணிப்புகள் பல பலித்திருக்கும் நிலையில் இதுவும் நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது. இரட்டை கோபுர தாக்குதல், கொரோனா பெருந் தொற்றும் இளவரசி டயானாவின் மரணம்ம் பாடகர் ஃபிரடி மெர்குரி மரணம் ஆகியவற்றை பாபா வாங்க ஏற்கனவே கணித்தவைதான் என்றும் கூறுகின்றனர். 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த பாபா வங்கா 12 வயதில் பார்வையை இழந்தார். அதற்குப் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்ற அவர் பல நிகழ்வுகளை கணித்திருக்கிறார். அதில் பல நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது இந்த கணிப்பு பலித்து விடுமோ என்ற அச்சம் இருந்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications