சீனாவில் கொடுமை.. கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாய்க்கு வயிறு கிழிந்தது!

சீனாவில் ஒரு பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால் அவரின் வயிறு கிழிந்து சிறிய அளவில் துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் ஒரு பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால் அவரின் வயிறு கிழிந்து சிறிய அளவில் துளை ஒன்று ஏற்பட்டுள்ளது. குழந்தை உதைத்த வேகம் அதிகமாகி அதிகமாகி திடீரென கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு சென்றுள்ளது. கருவில் இருந்த குழந்தையின் இந்த உதை காரணமாக வயிற்றில் சிறிய அளவில் துளை ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த விஷயம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது இருப்பதிலேயே மிகவும் கடினமான செயலாகும் அந்த பத்து மாதங்களும் என்ன நடக்கும் என்பதே தெரியாத அளவுக்கு ஒருவித பயம் கர்ப்பிணி பெண்களை தொற்றி இருக்கும். இது போன்ற சமயங்களில் குழந்தையையும், அந்தப் பெண்ணையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது மிக முக்கியமான விஷயமாகும்.

Baby in the womb kicks mother so hard which made a hole!

இது போன்று கர்ப்பமாக இருந்த சீனாவைச் சேர்ந்த ஷாங்க் என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. 35 வயது நிரம்பிய இவர் நிறைமாத கர்பிணி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றில் மிகவும் அதிக அளவில் வலி இருந்திருக்கிறது.

அதன்பின் கடந்த மூன்று நாட்களாக வலி சிறிது சிறிதாக அதிகரித்துள்ளது. மேலும் வயிற்றில் குழந்தை உதைத்த வேகமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குழந்தை வேகமாக உதைத்ததில் அந்தப் பெண்ணின் வயிற்றில் சிறிய அளவில் துளை விழுந்துள்ளது. இதையடுத்து வயிற்றில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளிவர தொடங்கி இருக்கிறது.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் சிறுநீர் பை நீக்கத்திற்காக இவர் செய்த ஆப்ரேஷனால் , வயிற்றின் சில பகுதிகள் வலிமை இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்தே குழந்தை உதைத்தவுடன் வயிற்றில் துளை உருவாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+