போதைப் பொருள் கடத்தல்: இந்தோனேசியாவில் தமிழர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை உறுதி
பாலி: பொதுமன்னிப்பு அளிக்க மறுத்த இந்தோனேசிய அதிபரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று இந்தோனேசிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான தமிழர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள டென்பசாரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 1 பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேர் பாலியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும், ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பவிருந்த விமானத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர்கள் 8.3 கிலோ ஹெராயினை இந்தோனேசியாவில் இருந்து கடத்த முயன்று போலீசில் சிக்கினர்.

இந்த வழக்கில் போதைப் பொருளை கடத்த ஆட்களை பணியமர்த்திய ஆஸ்திரேலியர்களான ஆன்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாறன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்ற 7 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சானும், சுகுமாறனும் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது பலனில்லை. இதையடுத்து அவர்கள் பொது மன்னிப்பு கோரி இந்தோனேசிய அதிபர் விடோடோவுக்கு மனு அளித்தனர். அவர்களின் கருணை மனுக்களை விடோடோ நிராகரித்தார். அதிபரின் முடிவை எதிர்த்து அவர்கள் ஜகர்தாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அதிபரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
அந்த இருவருக்கும் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான சுகுமாறன் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications