கறுப்பின இளைஞர் படுகொலை: பற்றி எரியும் பால்டிமோர் நகரம்! ப்ரூக்ளினில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி!
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. இதனிடையே ப்ரூக்ளினில் தேவாலயம் அருகே மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், பால்டிமோர் நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கண்ணில் தென்படும் போலீசார் வாகனங்களை அடித்து நொறுக்குகின்றனர்.. இதில் போலீசார் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
வணிக வளாகங்கள் தீ வைக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசாரும் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் தொடருவதால் அங்கு காலை முதல் மாலை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாகாணங்களில் இருந்தும் பாதுகாப்புப் படையினர் பால்டிமோரில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ப்ரூக்ளினில் துப்பாக்கிச் சூடு
இதனிடையே ப்ரூக்ளின் நகரில் தேவாலயம் அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மயானத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications