கைகொடுக்காத Gen Z இளைஞர்களின் போராட்டம்! தூக்கி சாப்பிட்ட BNP கட்சி! யார் இந்த தாரிக் ரஹ்மான்?
டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது Gen Z இளைஞர்களின் போராட்டம்தான். வெறுமென போராட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்த இளைஞர்கள், புதிய கட்சியை தொடங்கினர். ஆனால், இந்த கட்சி தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. இக்கட்சியை வீழ்த்தி, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) முன்னிலை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து வங்க தேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்பார் என்று சொல்லப்படுகிறது. இவர அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்.

பங்களாதேஷ் தேசியவாத கட்சி
இவரது தந்தை ஜியாவுர் ரஹ்மான் தான் BNP கட்சியை தொடங்கினார். ஜியாவுர் ரஹ்மான் வங்கதேசத்தின் முன்னாள் அதிபராகவும் இருந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக கடந்த 1965ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், இவரது மனைவி கலீதா ஜியா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கலீதா ஜியா
அந்த காலங்களில் பெண்கள் இப்படியான உயர் பதவிகளுக்கு வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு தாரிக் ரஹ்மானின் முழு ஆதரவு இருந்தது. ஆனால், இந்த ஆதரவு படிப்படியா அதிகாரமாக உருமாற்றம் பெற்றது. பிரதமராக இருந்தது என்னவோ, தாய் கலீதா ஜியா தான். ஆனால், அதிகாரங்கள் அனைத்தையும் தாரிக் ரஹ்மான் வசம் இருந்தன. இவர் நிகழ் பிரதமராக செயல்பட்டார். எனவே இவருக்கு டார்க் பிரின்ஸ் என்கிற பெயரும் இருந்தது.
எல்லாம் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்தது என்ற தாரிக் ரஹ்மான் நினைத்துக்கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அதாவது 2007ல் ராணுவ ஆதரவுடன் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
மோசடி குற்றச்சாட்டுகள்
புதிய அரசு, தாரிக் ரஹ்மான் மீது புதிய குற்றச்சாட்டுகளை அடுக்க தொடங்கியது. ஊழல், பண மோசடி என இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் காரணமாக தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இருப்பினும் உடல் நலம் தொடர்பான காரணங்களை காட்டி 2008ல் ஜாமினில் வெளியே வந்த அவர், லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார்.
ஆயுள் தண்டனை
லண்டன் போனவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். மொத்தமாக 17 ஆண்டுகள் அவர் லண்டனில் இருந்தார். இந்த காலங்களில் அவர் மீது இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. எனவே தாரிக் லண்டனிலிருந்து வரவில்லை.
மக்களிடையே வரவேற்பு
இப்படியே போய்க்கொண்டிருந்தபோதுதான், Gen Z இளைஞர்களின் போரட்டம் வெடித்தது. ஹசீனா ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் தாரிக்கின் தாய் உயிரிழந்தார். இதனையடுத்து 17 ஆண்டுகள் கழித்த தாய் நாடு திரும்பிய தாரிக், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது அவரது கட்சி பெரும்பான்யைான இடங்களை வென்றிருக்கிறது.
புதிய பிரதமராக
விரைவில் அவர், வங்கதேசத்தின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னதான் Gen Z இளைஞர்களின் போராட்டம் தீவிரமாக இருந்தாலும், அரசியல் தெளிவு இல்லாத போராட்டங்கள் கோரிக்கையை வெற்றிக்கொள்ள உதவாது என்பதற்கு வங்கதேச தேர்தல் லைவ் உதாரணமாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications