Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உயிர் பயத்தில் அலுவலகத்திற்குள் சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்கள்”.. அச்சுறுத்திய போராட்டக்காரர்கள்!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த கும்பல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். பின்னர், அவர் வங்கதேசத்தில் இருந்து தப்பிவந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் இன்கிலாம் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது.

Bangladesh Erupts in Violence After Student Leader s Death Media Houses Targeted

இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட இருந்தார். இதையொட்டி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தலைநகர் டாக்காவில் ரிக்‌ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் தோட்டா பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்த ஹாதி, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

ஷரீஃப் உஸ்மான் ஹாதி மரணத்தைத் தொடர்ந்து கொதிப்படைந்த மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' (Prothon Alo) மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.

ப்ரோதோம் அலோவின் நிர்வாக ஆசிரியர் சஜ்ஜாத் ஷெரீப், இந்தத் தாக்குதலை வங்கதேச செய்தித்தாள்களுக்கு "இருண்ட இரவு" என்று விவரித்துள்ளார். எங்கள் செய்திகளை இன்று வெளியிட முடியவில்லை, எங்கள் ஆன்லைன் தளம் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. 1998 இல் நிறுவப்பட்டதிலிருந்து, 27 ஆண்டுகளில், எங்கள் செய்தித்தாளை வெளியிடாமல் இருப்பது இதுவே முதல் முறை என்று ஷெரீப் கூறியுள்ளார்.

"ஒரு பெரிய பேரழிவிலிருந்து மயிரிழையில் தப்பித்தோம். இந்த நாடு எங்கு செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. போராட்டக்காரர்கள் கட்டிடத்திற்கு தீ வைத்ததால் ஊழியர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். எங்களால் சுவாசிக்க முடியவில்லை" என தி டெய்லி ஸ்டார் அலுவலகத்தில் சிக்கிய ஒரு பத்திரிகையாளர் வேதனையுன் கூறியுள்ளார்.

இதேபோல் சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்த வன்முறைகளால் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+