கட்டிய லுங்கியுடன் தப்பி ஓட்டம்! அதிகாலையில் எஸ்கேப் ஆன முன்னாள் அதிபர்.. மீண்டும் அதிரும் வங்கதேசம்
டாக்கா: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னாள் அதிபருமான அப்துல் ஹமீது கட்டிய லுங்கியுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஒடிய சம்பவம் வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுங்கியுடன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டின் தாய் ஏர் விமானத்தில் அப்துல் ஹமீது செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை விட்டு விலகி நாட்டை விட்டு தப்பி ஓடினார். வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் உள்ளார். இவரது ஆட்சியின் கீழும் வங்கதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

கட்டிய லுங்கியுடன் தப்பி சென்றார்
இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதால் அவருக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வங்க தேச அரசு முன்வைத்து வருகிறது. இதற்கு எந்த ஒரு பதிலும் இந்திய அரசு அளிக்கவில்லை. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவாமி லீக் கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னாள் அதிபருமான அப்துல் ஹமீது வெளிநாட்டிற்கு தப்பி ஒடிய சம்பவம் வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுங்கியுடன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டின் தாய் ஏர் விமானத்தில் அப்துல் ஹமீது செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிகாலை 3.05 மணிக்கு
அவாமி லீக் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள், வெளிநாடு செல்லும் போது மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ஆனால், அப்துல் ஹமீது நாட்டை விட்டு வெளியேறும் போது அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அதிகாலை 3.05 மணிக்கு அப்துல் ஹமீது நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்துல் ஹமீது நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
வங்கதேச அரசியல் அமைப்பு விதிகளின்படி, நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படாத பட்சத்தில் நாட்டை விட்டு வெளியேற யாருக்கும் தடை விதிக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "அப்துல் ஹமீதுக்கு எதிராக எங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை. அப்துல் ஹமீதை தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் என்று எந்த ஒரு விசாரணை முகமையும் கூறவில்லை" என்றனர்.
பல தலைவர்கள் மாயம்
இதற்கிடையே, அப்துல் ஹமீதின் பாதுகாப்பு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் ஹமீது மருத்துவ சிகிச்சைக்காக தனது சகோதரருடன் சென்று இருப்பதாகவும், அவர் தப்பி ஓடிவிட்டதாக அவரது அரசியல் எதிரிகள் சித்தரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே அவரது கட்சியின் பல தலைவர்கள் மாயம் ஆகியுள்ளனர். முன்னாள் பிரதமர் கலிதா ஜியா லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுவிட்டு கடந்த வாரம்தான் டாக்கா திரும்பியிருந்தார். அவர் டாக்கா திரும்பிய போது விமான நிலையத்தில் இருந்து அவரது வீடு வரை பிஎன்பி கட்சியினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.












Click it and Unblock the Notifications