Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகமது யூனுஸ்க்கு புது தலைவலி.. வங்கதேச ஆலோசகர் பதவியை தூக்கியெறிந்த மாணவர்.. உதயமாகும் புதிய கட்சி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசில் ஆலோசகர் பதவி வகித்து வந்த மாணவர் தலைவர் நஹித் இஸ்லாம் அதனை தூக்கியெறிந்துள்ளார். தான் ஆலோசகர் பதவியில் இருந்து விலகி கொள்வதற்கான ராஜினாமா கடிதத்தை முகமது யூனுஸிடம் வழங்கி உள்ளதோடு அவர் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இது முகமது யூனுஸ்க்கு தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். முகமது யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 பேர் அமைச்சர்கள் ரோலில் ஆலோசகர்களாக இடம்பெற்றனர்.

bangladesh muhammad yunus

இதில் இதில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த 26 வயது மட்டுமே நிரம்பிய 2 மாணவ அமைப்பின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் 2 பேரும் அரசின் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத். இவர்கள் 2 பேரும் ஆலோசகர்களாக செயல்பட்டு வந்தனர்.

இதில் நஹித் இஸ்லாம் தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் திடீரென்று அவர் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் நேற்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸிடம் வழங்கி உள்ளார்.

இதுபற்றி நஹித் இஸ்லாம் கூறுகையில், ‛‛அமைச்சரவையில் இருந்து விலகி கொள்ள நான் முடிவு செய்தேன். அதேபோல் புதிய கட்சியை தொடங்க உள்ளேன். இந்த கட்சி பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கப்படும்'' என கூறியுள்ளார். இதன்மூலம் வங்கதேசத்தில் புதிய அரசியல் கட்சி உருவாவது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிக்கு தலைவர் யார்? என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. நஹித் இஸ்லாமே அந்த கட்சியின் தலைவராக செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முகமது யூனுஸின் தலைமையிலான இடைக்கால அரசில் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ள நஹித் இஸ்லாம், ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்காற்றினார். மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார். நஹித் இஸ்லாம் சமூகவியல் (Sociology) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை படித்துள்ளார். இவர் நூருல் ஹக் நூர் தலைமையிலான சத்ர ஓதிகார் பரிஷத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட கனோதந்திரிக் சத்ர சக்தியின் உறுப்பினர் செயலாளராக இருந்தார்.

இவர்ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது அடக்குமுறைக்கு ஆளானார். அதாவது போராட்டத்தை முன்னெடுத்த மாணவ பிரதிநிதிகள் சித்ரவதை செய்யப்பட்டதில் இவரும் பாதிக்கப்பட்டார். டிடெக்டிவ் பிராஞ்சால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தான் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க தொடங்கி ஹசீனாவை ஆட்சியில் இருந்து விரட்டி வெற்றியும் பெற்றார். அதன்பிறகு ஆலோசகராக பதவியேற்ற பிறகு ‛‛வங்கதேசம் இளைஞர்களின் கையில் இருந்தால் ஒருபோதும் இலக்கில் இருந்து தடம் மாறாது. இளைஞர்களின் இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வென்றுள்ளனர். பல இளைஞர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.இளைஞர்கள் அரசின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

தற்போதைய இடைக்கால அரசு என்பது இளைஞர்கள் மற்றும் அனுபவசாலிகளின் கலவையாக உள்ளது. இதனால் இந்த அரசு நிச்சயம் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். வங்கதேச மக்கள் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர். வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்'' என்று கூறியிருந்தார். தற்போது அவர் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

நஹித் இஸ்லாமின் இந்த முடிவு முகமது யூனுஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக தொடர்ந்து செயல்பட நினைக்கிறார். இப்படியான சூழலில் அவருக்கு கீழ் செயல்பட்ட நஹித் இஸ்லாம் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை தொடங்க உள்ளார். இவருக்கு வங்கதேசத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதனை ஓட்டாக அறுவடை செய்யும் முனைப்பில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் விரைவில் நஹித் இஸ்லாமும் பிற கட்சிகளை போல் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கலாம். இது முகமது யூனுஸ்க்கு சிக்கலை தர வாய்ப்புள்ளது.

ஏனென்றால் முகமது யூனுஸை பொறுத்தவரை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் நஹித் இஸ்லாமை பொறுத்தவரை நன்கு திட்டமிட்டு நிர்வாகிகள் நியமனம் வரை அனைத்தையும் தயார் செய்த பிறகே ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் தற்போது தனக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் ஹசீனா, கலிதா ஜியா உள்ளிட்ட மாஜி பிரதமர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றால் விரைவில் தேர்தல் நடத்துவது அவசியம். இதனால் முகமது யூனுஸ்க்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+