இந்து வியாபாரியை கொன்று உடலில் ஏறி நடனமாடிய கும்பல்.. ஷாக் வீடியோ.. வங்கதேசத்தில் அட்டூழியம்
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது அடக்குமுறைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்து வியாபாரிகயை கான்கிரீட் சிலாப் கொண்டு தாக்கி கொன்ற கும்பல் அவரது உடல் மீது வி நடமானடியா வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டுடன் தொடர்ந்து மோதி வருகிறார்.

இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. முகமது யூனுஸ் சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் கோவில்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மேலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு ம்ததிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்துக்கள் உள்பட சிறுபான்மையினரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை கூறியும் முகமது யூனுஸ் கேட்கவில்லை. இப்படியான சூழலில் தான் தற்போது இந்து வியாபாரி அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் லால் சந்த் சோஹாக். இவர் பழைய இரும்பு வியாபாரி. பழைய டாக்கா பகுதியில் உள்ள மிட்ஃபோர்ட் மருத்துவமனையின் முன் கடை வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற கும்பல் அவரிடம் மிரட்டி பணம் கேட்டது. அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் கோபமான கும்பல் அவரை கான்கிரீட் சிலாப்பால் தாக்கியது.
இதில் நிலைக்குலைந்துபோன லால் சந்த் கீழே விழுந்தார். இதையடுத்து அவரிடம் இருந்து அந்த கும்பல் பணத்தை பறித்தது. இதற்கிடையே கீழே விழுந்த லால் சந்த் இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அவரது உடல் மீது ஏறி நின்று நடனமாடிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் டாக்கா பல்கலைக்கழகம், ஜெகன்நாத் பல்கலைக்ழகம், BRAC பல்கலைக்கழகம், என்எஸ்யூ, கிழக்கு மேற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசு நடத்தும் ஈடன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இடைக்கால அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "மக்களை கொல்ல மிருகங்களுக்கும், உங்களுக்கும் யார் உரிமை கொடுத்தது? மிரட்டி பணம் பறிப்பவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது இடைக்கால அரசு என்ன செய்கிறது?" என்று கோஷமிட்டனர். டாக்கா உள்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பக கோட்வாலி போலீசார் மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் 14 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications