மாணவர் தலைவர் கொலைக்கு காரணம்.. வங்கதேச அரசுதான்! யூனுஸுக்கு எதிராக தீவிரமடையும் குற்றச்சாட்டுகள்
டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், இந்திய துணை தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஹாடியின் சகோதரர், இந்த படுகொலைக்கு யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. தொடர் போராட்டத்தையடுத்து ஹசீனா இந்தியாவில் வந்து தஞ்சமடைந்தார்.

மாணவர் தலைவர்
இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தேர்தலில் இன்குலாப் மான்சா எனும் மாணவர் அமைப்பின் தலைவர், உஸ்மான் ஹாடி போட்டியிட இருந்தார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தவர். வங்கதேசத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு இந்தியாதான் காரணம் என்று கூறியவர்.
படுகொலை
இப்படி இருக்கையில் கடந்த டிச.12ம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் வங்கதேசத்தில் புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஹாடியை கொன்றது இந்தியாதான் என்றும், கொலையாளிகள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர் என்றும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கொலைக்கு காரணம்
ஹாடியின் இறுதி சடங்குகளில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனுஸ், "நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று உங்களுக்கு உறுதியளிக்க வந்துள்ளோம்" என்று பேசியிருந்தார். அதாவது இந்திய எதிர்ப்பு என்கிற கருத்தியலை நாங்கள் மேலும் வலுவாக்குவோம் என்று கூறியிருந்தார். இது இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது. இப்படி இருக்கையில்தான், ஹாடி கொலைக்கு இந்தியா காரணம் கிடையாது, யூனுஸ் தலைமையிலான அரசுதான் என்று ஹாடியின் சகோதரர் கூறியுள்ளார்.
யூனுஸ்தான் காரணம்
"நீங்கள் உஸ்மான் ஹாடியைக் கொன்றீர்கள், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கிறீர்கள். தேர்தல் சூழல் பாதிக்கப்படாத வகையில் கொலையாளிகள் மீது விரைவான விசாரணை நடைபெற வேண்டும். அரசாங்கம் எங்களுக்கு எந்தவித தெளிவான முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. உஸ்மான் ஹாடிக்கு நீதி வழங்கப்படாவிட்டால், நீங்களும் ஒரு நாள் வங்கதேசத்திலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
யார் காரணம்?
இந்த விமர்சனங்கள் யூனுஸ் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஹாடியின் கொலைக்கு பின்னால் சீனா, அமெரிக்காவின் சித்து விளையாட்டுகள் இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் நட்பு நாடாக மாறியிருக்கிறது. அந்த வரிசையில், வங்கதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று சீனா உள்ளடி வேலை பார்க்கிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் வங்கதேசம் சீனா பின்னால் சென்றுவிடக்கூடாது என, அமெரிக்கா அதை விட தீவிரமாக வேலை பார்க்கிறது.
இப்படி இருக்கையில், வங்கதேசத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனை வீழ்த்தி மீண்டும் வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications