இத்தனை உயிர் பலிகளுக்கு பிறகாவது, உண்மையான ஆபத்தை உணர்வாரா வங்கதேச பிரதமர்?
டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு, தனது அரசியல் எதிரிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச நேஷனல் கட்சிகளை குறை சொல்லி வருகிறார் பிரதமர் ஷேக் ஹசினா. இவர்களின் கைவண்ணம் இருப்பதை புறம் தள்ள முடியாது என்றபோதிலும், முழுக்க இவர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் என்பதையும் ஏற்க முடியாது.
தலைக்கு மேல் வெள்ளம் போய் கொண்டிருப்பதை ஷேக் ஹசினா உணர வேண்டும் என்பது பல நாட்டு பத்திரிகையாளர்களின் கட்டுரைகளின் சாராம்சமாக உள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவின் குல்ஷன் என்ற இடத்தில் வெளிநாட்டு தூதரங்கள் உள்ளன. பாதுகாப்பு மிகுந்த அப்பகுதியில் ஹோலே ஆர்டிசன் பேக்கரி என்ற ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டலில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் துப்பாக்கி ஏந்திய 5 மர்ம நபர்கள் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இருந்தும் அவர்களை தப்பி ஓட விடாமல் மர்ம நபர்கள் மடக்கிபிடித்து துப்பாக்கி முனையில் 35 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்களில் 20 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே ஹைட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். மர்ம நபர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் 12 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவிர மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே வங்கதேசத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. இந்து, கிறிஸ்தவர், மதசார்பின்மைவாதிகள் வரிசையாக படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இதற்கு பொறுப்பேற்றபடியே உள்ளனர்.
ஆனால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவோ, தனது அரசியல் எதிரிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச நேஷனல் கட்சிகளை குறை சொல்லி வருகிறார். இவர்களின் கைவண்ணம் இருப்பதை புறம் தள்ள முடியாது என்றபோதிலும், முழுக்க இவர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் என்பதையும் ஏற்க முடியாது.
தலைக்கு மேல் வெள்ளம் போய் கொண்டிருப்பதை ஷேக் ஹசினா உணர வேண்டும் என்பது பல நாட்டு பத்திரிகையாளர்களின் கட்டுரைகளின் சாராம்சமாக உள்ளது.
ஷேக் ஹசினா உடனடியாக உண்மையான ஆபத்தை கண்டறியாவிட்டால், வங்கதேசம் தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications