வங்கதேசம்: ஷேக் ஹசீனா வீட்டு 'உள்ளாடைகளை' கூட விட்டு வைக்காமல் சூறையாடிய வன்முறையாளர்கள்!
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா , 16 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார். முதலில் திரிபுரா சென்ற ஷேக் ஹசீனா பின்னர் இந்திய விமானப் படை பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமான படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனிடையே டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் ஒன்றுவிடாமல் கொள்ளையடித்துச் சென்றது. இதில் படுகேவலமாக ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகளையும் விட்டுவைக்கவில்லை. வன்முறை கும்பலைச் சேர்ந்த ஒருசிலர், அந்த மாளிகையில் இருந்த சேலைகளை கட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த கூத்தும் நிகழ்ந்துள்ளது.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications