Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முகமது யூனுஸ் உதவுகிறார்.." வங்கதேச மாணவர் லீக் பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே முகமது யூனுஸ் பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக வங்கதேச மாணவர் லீக் அமைப்பின் தலைவர் சதாம் உசைன் விமர்சித்துள்ளார். உளவு அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் உடனும் அதிக நெருக்கம் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு அரசியல் குழப்பம் வெடித்தது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த ஷேக் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டு, அவர் நாட்டை விட்டே வெளியேறினார். அங்கு யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது..

Bangladesh Students League Slams Yunus Govt Over Pakistan Ties in 2025

பரபர குற்றச்சாட்டு

முகமது யூனுஸ் பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக வங்கதேச மாணவர் லீக் அமைப்பின் தலைவர் சதாம் உசைன் விமர்சித்துள்ளார். யூனுஸின் இடைக்கால ஆட்சி பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் உறவுகளை ஊக்குவிக்கிறது என்றும் சாடியுள்ளார். இது 1971 விடுதலைப் போரின் பாரம்பரியத்தை அவமதிப்பதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று உசைன் சாடியுள்ளார்.

ஹீசனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான வங்கதேச மாணவர் லீக் அமைப்பின் தலைவராக இருப்பவர் உசைன். இவர் இப்போது யூனுஸ் அரசு மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முகமது யூனுஸ் அரசை விமர்சித்துப் பேசிய அவர், "எங்கள் மண்ணில் ஒரு காலத்தில் இனப்படுகொலை செய்தவர்களை அவர்கள் சட்டப்பூர்வமாக்குகிறார்கள்" என்று குறிப்பிட்டார். 1971 படுகொலைகளில் பாகிஸ்தானின் பங்கைக் குறிப்பிடும் வகையில் உசைன் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

தீவிரவாதிகளுக்கு உதவி

பாகிஸ்தானுடன் தொடர்புள்ள ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்ப் உத்-தஹ்ரிர், அன்சாருல்லா பங்களா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அரசு ஆதரவு கிடைப்பதாகவும் அவர்கள் எளிதாக உயர் அதிகாரிகளையும் இடைக்கால தலைவரையும் சந்திப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இடைக்கால அரசு வங்கதேசத்தின் சுதந்திர வரலாற்றை அழித்துவிட முயல்கிறது. அவர்கள் ஏற்கனவே ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்தை அவர்கள் இடித்துவிட்டனர். விடுதலைப் போர் சிற்பங்கள் மற்றும் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது வெறும் வரலாற்றுத் திரிபு மட்டுமல்ல; திட்டமிட்ட அழிப்பு" என்று அவர் கூறினார்.

காரணமே அவர்கள் தான்

கடந்த காலங்களில் குற்றச் செயலுக்காகத் தண்டனை பெற்ற தீவிரவாதிகள் இப்போது விடுவிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது.. ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த அரசியல் கொந்தளிப்பில் இவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதன் காரணமாகவே இப்போது அவர்கள் வெகுமதியைப் பெறுகிறார்கள். மேலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உடன் தீவிர தொடர்புகளைக் கொண்டு சர்வதேச பயங்கரவாதத்தின் களமாக மாறும் அபாயம் வங்கதேசத்திற்கு உள்ளது" என்றார்

வங்கதேசத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், "சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். ஆகஸ்ட் 5 முதல் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து 2,200க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் கொலைகள், கொள்ளைகள், கோவில்கள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.. சிறுபான்மை குழுக்களை பொது வாழ்க்கையிலிருந்து இடைக்கால அரசு திட்டமிட்டு ஒதுக்குகிறது. அரசு பதவிகளில் இருந்தும் ஓரம்கட்டப்படுகிறார்கள்" என்றார்.

முகமது யூனுஸ் மீது தாக்கு

இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை கடுமையாக விமர்சித்த உசைன், "அவர் வெளிநாடுகளில் அமைதி மற்றும் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்.. ஆனால் அவரது ஆட்சியில் வங்கதேச மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிருப்தியை வெளிப்படுத்துவது கூட குற்றமாக்கப்படுகிறது.. அவாமி லீக்கை ஆதரிக்கும் மாணவர்கள் கூட கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+