முகமது யூனுசே எதிர்பார்க்கலை.. வங்கதேச இடைக்கால அரசுக்கு எகிறிய சப்போர்ட்.. சர்வே ரிசல்ட் இதுதான்
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு நம் நாட்டுடன் மோதலை தீவிரமாக்கி வருகிறது. வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. இது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இடைக்கால அரசின் செயல்பாடு எப்படி உள்ளது? என்று இளைஞர்கள் இடையே சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் முகமது யூனுசே எதிர்பார்க்காத ரிசல்ட் வந்துள்ளது. இதனால் இடைக்கால அரசு ஹேப்பியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார். அதோடு நமக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுடன் அவர் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.
இதனால் தான் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. வங்கதேசம் தற்போது நம்முடன் வீரியமாக மோதலை தொடங்கி உள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவால் எளிதாக சமாளிக்க முடியும். இருப்பினும் நம் நாடு வங்கதேசத்துடன் நட்புறவை தான் விரும்புகிறது. இதனால் தான் அமைதி காத்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க வங்கதேசத்தில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. வரும் ஜுலை மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் முகமது யூனுஸ் அதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 17 ஆக குறைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். இதனால் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தலை நடத்த முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் வங்கதேச யூத் லீடர்ஷிப் சென்டர் (BYLC) சார்பில் சர்வே என்பது மேற்கொள்ளப்பட்டது. அபூல் காயர் ஷாஹிப் தலைமையில் இந்த சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த சர்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 3,238 பேர் பங்கேற்றனர். இதில் 1,575 பேர் பேர் நேரடியாகவும், 1,663 பேர் ஆன்லைன் வழியாகவும் சர்வேயில் பங்கேற்றனர்.
இந்த சர்வேயில் ஆன்லைனில் பங்கேற்றவர்களில் 41.4 சதவீதம் பேர் முகமது யூனுஸின் இடைக்கால அரசுக்கும், நேரடியாக சர்வேயில் பங்கேற்றவர்களில் 50.9 சதவீதம் பேர் முகமது யூனுஸின் இடைக்கால அரசுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூற வேண்டும் சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முகமது யூனுஸின் இடைக்கால அரசு என்பது ஒன்று முதல் 3 ஆண்டு வரை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது வங்கதேசத்தில் முகமது யூனுஸின் இடைக்கால அரசுக்கு பாசிட்டிவ்வாக அமைகிறது.












Click it and Unblock the Notifications