வங்கதேசத்தில் 4-வயதில் 80-வயதான முதியவர் போன்ற தோற்றத்தில் சிறுவன்... குழப்பத்தில் மருத்துவர்கள்
டாக்கா: வங்கதேசத்தில் 4-வயது சிறுவன் 80-வயது முதியவர் போன்ற தோற்றத்தில் உள்ளதால் அவரால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனைக் கண்டு மற்ற குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.
தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியைச் சேர்ந்தவர் லாப்லு ஷிக்தர் (22). அவரது மனைவி திப்தி கேதன் (18). இந்த தம்பதிக்கு கடந்த 2012-ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே கைகள், முகத்தில் தோல் சுருங்கி முதுமை தோற்றத்துடன் பிறந்துள்ளது.
Curious Case of Bayezid Shikdar: 4-year-old 'old man' baffles doctors https://t.co/zn3cg9rPRm pic.twitter.com/Gf08Ie0QpY
— Emirates 24|7 (@Emirates247) August 9, 2016
குழந்தைக்கு பயேஜித் ஷிக்தர் என்று பெற்றோர் பெயரிட்டனர். தற்போது 4 வயதாகும் அந்த சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறார். சிறுவனுக்கு இதய நோய், பார்வை குறைபாடு, காது கேளாமை போன்ற குறைபாடுகளும் உள்ளதாம்.
பயேஜித் ஷிக்தர் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது முதுமை நோய்க்கான காரணத்தை கண்டறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்க டாக்காவில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை லாப்லு ஷிக்தர் கூறியதாவது: எனது குழந்தையின் இந்த குறைபாடுகள் குறித்து பல மருத்துவரிடம் காண்பித்துள்ளேன். ஆனால், மருத்துவர்கள் எனது குழந்தையின் நிலை குறித்து குழப்பம் அடைந்துள்ளனர் என்று கூறினார். தற்போது 4 வயதாகும் அந்த சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறார்.
டாக்கா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது: குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் என்பது குறித்து கண்டரிய விரிவான சோதனை நடத்த வேண்டும். நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications