அன்று “வீட்டு வேலைக்காரி”... இன்று “பியூட்டி குயின்".. இது ஜனிசல் லுபினியாவின் கதை!
மணிலா: பிலிப்பைன்ஸில் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்த ஒருவர் இன்று பிலிப்பைன்ஸே போற்றும் அழகியாக வலம் வந்து அசத்தி வருகிறார். அவர்தான் ஜனிசல் லுபினியா.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வறுமை மிகுந்த பகுதியான பாலவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜனிசல். தாயார் வீட்டு வேலைக்காரியாக இருந்தார். இளம்வயதில், ஜனிசலும் தனது தாயாருடன் வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.
வறுமையில் வாடிய குடும்பமா இருந்தாலும் கடவுள் கொடுத்த வரமாக சிறுமி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இளம் மங்கையானார்.

ஜனிசல் 6 அடி உயரமுள்ள அழகு பதுமை. கரு கருவென்ற கூந்தல், பட்டு போன்ற உடல் வாகு. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் அழகு. அவரது அதிர்ஷ்டம் மெலிந்த பட்டு போன்ற உடலின் அழகால் கவரப்பட்ட ஒரு ஒப்பனைக் கலைஞரால் கண்டெடுக்கப்பட்டு தூசி படிந்த தெருக்களில் சுற்றிய லுபினியா மாடல் அழகியாக மாறினார்.
இப்போது பிலிப்பைன்சில் இவரது பெயரை உச்சரிக்காத வீடுகளே இருக்க முடியாது. 2013 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ்சாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அது முதல் சிறந்த மாடல் அழகியாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார். இந்த வாழ்க்கை கிடைத்தற்காக அவர் அழகி போட்டிகளுக்கு நன்றி செலுத்துகிறார்.
இது குறித்து அவர், "எனது தாயார் வீட்டு வேலைக்காரியாக இருந்து உள்ளார். நானும் வீட்டு வேலைகளை செய்து உள்ளேன். ஒரு நாள் நான் ஒரு தளம் முழுவதையும் சுத்தம் செய்தேன்.
எனது முதலாளி அது சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என கூறி மீண்டு அந்த தளம் முழுவதையும் சுத்தம் செய்யுமாறு கூறினார். நானும் சுத்தம் செய்தேன்" என்று தனது பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications