மாட்டுக்கறி சமைச்சே ஆகணும்.. வங்கதேசத்தில் இந்துக்களை மிரட்டும் கும்பல்! ஓட்டல்களில் மாறும் நடைமுறை
டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்கும் நிலையில் தான் தற்போது அங்கு மாட்டுக்கறி அரசியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதாவது அனைத்து ரெஸ்டாரண்ட் மற்றும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் மாட்டுக்கறியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உணவகங்கள் புறக்கணிப்பு செய்யப்படும் என்று டாக்காவில் இந்து வியாபாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். ஆனால் முகமது யூனுஷ் வந்ததில் இருந்து வங்கேதசம் - இந்தியா இடையேயான உறவு மோசமாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இருநாடுகளின் உறவுகள் மோசமாகி உள்ளது.
இதற்கு வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஷ் தான் முக்கிய காரணம். அதாவது அந்த நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் என்பவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதோடு அந்த நாட்டில் சட்டம் -ஒழுங்கு என்பது இல்லாத நிலை உள்ளது. முகமது யூனுஷ் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வைப்பது தான் சட்டம் என்பது போல் உள்ளது. அதோடு அந்த அரசை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலனை இடைக்கால அரசு பாதுகாக்க வேண்டும் என்று நம் நாடு கூறியும் வங்கதேசம் கேட்டதாக தெரியவில்லை.
இதனால் தொடர்ந்து இந்துக்கள் மீதான அடக்குமுறை வங்கதேசத்தில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளகுலிஸ்தான் கோலப் ஷா மஜார் அருகே சமீபத்தில் ‛Muslim Bhokta Adhikar Parishad' சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இந்து ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டு உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் கட்டாயம் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது வங்கதேசத்தில் உள்ள மக்களுக்கு பேவரைட் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. இதனால் அனைத்து உணவகங்களின் உணவு பட்டியலிலும் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தந்த உணவகங்கள் புறக்கணிக்கப்படும் என்று மிரட்டி உள்ளனர்.
வங்கதேசத்தில் கணிசமான அளவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உள்ளனர். இதில் சில இந்துக்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் நடத்தி வருகின்றனர். அவர்கள் மாடுகளை கடவுளாக பார்ப்பதால் அதன் இறைச்சி சார்ந்த உணவுகளை விற்பனை செய்வது இல்லை. ஆனால் தற்போது அவர்களின் உணவகங்களிலும் மாட்டிறைச்சி சார்ந்த உணவு விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி சிலர் தற்போது மாட்டிறைச்சி உணவை மெனுவில் சேர்க்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications