ஆடு, மாடு வைத்திருந்தால்.. ஏப்பத்திற்கும் கூட வரி! நியூசிலாந்து அரசின் புதிய சட்டம்! ஏன் தெரியுமா
வெலிங்டன்: அனைத்து உலக நாடுகளும் வரி வசூலிக்கிறது என்றாலும் கூட, நியூசிலாந்து அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ள வரி முறை அனைவருக்கும் சிரிப்பைத் தருவதாக உள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மக்களிடம் இருந்து வரி வசூல் செய்வது என்பது வழக்கமான நடைமுறை தான். மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில நாடுகள் எதற்கெல்லாம் வரி வசூலிக்கிறது என்பதைக் கேட்டால் குபீரென சிரிப்பு வரத் தான் செய்யும். அதுபோல ஒன்றைத் தான் நியூசிலாந்து அரசும் செய்துள்ளது.

ஏப்பம்
நியூசிலாந்து அரசு ஏப்பம் விட்டால் கூட வரி வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆம்! நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். ஏப்பம் விடுவது என்பது மிகவும் அசௌகரியமாக இருந்தாலும் கூட, அது அபராதம் விதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று யாரும் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நியூசிலாந்து அரசு கால்நடைகளை வைத்து இருப்பவர்களுக்கு பர்பிங் வரி எனப்படும் ஏப்பத்திற்கான வரியை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

காரணம்
இது வினோதமாகத் தோன்றினாலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்திற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிரீன் ஹவுஸ் கேஸ்களின் வெளியேற்றத்தை எதிர்த்துப் போராடும் வகையில் நியூசிலாந்து அரசு கால்நடைகளுக்கு இந்த வரி விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

கால்நடைகள்
வெறும் 50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்து நாட்டில் சுமார் ஒரு கோடி மாடுகளும் 2.6 கோடி ஆடுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்து அரசு வெளியேற்றும் கிரீன் ஹவுஸ் கேஸ்களில் கிட்டத்தட்டப் பாதி விவசாயத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீத்தேன் வாயு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மீத்தேன்
நிலையான வளர்ச்சி என்ற நோகத்தை அடையக் கால்நடைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களுக்கு வரி வசூலிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. நியூசிலாந்தின் மொத்த மீத்தேன் உமிழ்வில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை இரண்டு விவசாய துறையில் இருந்தே வருகிறது. விலங்கு ஏப்பம், விலங்கின் கழிவு ஆகியவை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக ஏப்பம் காரணமாகவே 97 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பசுக்களில் இருந்தே 95 சதவீதம் மீத்தேன் வெளியேற்றப்படுகிறது.

இலக்கு
வரும் 2025ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தங்கள் விலங்குகளின் உமிழ்வுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற வரைவுத் திட்டத்தை நியூசிலாந்து அரசு புதன்கிழமை அறிவித்தது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான இயக்கத்துடன் இணைந்து நியூசிலாந்து அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உமிழ்வைக் குறைக்க கார்பனை வெளியேற்றத்தைக் குறைவாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வரி
இது குறித்து நியூசிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய மற்றும் நீண்ட கால கிரீன் ஹவூஸ் வாயுக்கள் தனித்தனியாக வரி நிர்ணயம் செய்யப்படும். வளிமண்டலத்தில் நாம் செலுத்தும் மீத்தேன் அளவைக் குறைக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாய துறையில் கிரீன் ஹவுஸ் கேஸ்களுக்கு வரிகளை நிர்ணயம் செய்வது அதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications