பிகினி உடையில் திருடனைத் துரத்தி மடக்கிப் பிடித்த தில்லான பெண் போலீஸ்!
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனைச் சேர்ந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் பிகினி உடையில் திருடனைத் துரத்திப் பிடித்து மடக்கிய செயல் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இதுதொடர்பான படமும் வைரல் ஆக பரவி வருகிறது.
ஸ்டாக்ஹோமைச் சேர்ந்தவர் மிகேலா கெல்னர். இவர் போலீஸ் அதிகாரி. சம்பவத்தன்று தனது தோழிகளுடன் கடற்கரை ஒன்றில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தார் கெல்னர்.
அப்போது கெல்னரும், அவரது தோழிகளும் இருந்த இடத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென அங்கிருந்த செல்போன் ஒன்ற எடுத்துக் கொண்டு ஓடினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கெல்னர் சட்டென சுதாரித்துக் கொண்டு அப்படியே திருடனை துரத்திக் கொண்டு ஓடினார்.
மின்னல் வேகத்தில் ஓடிய அவர் திருடனை மடக்கிப் பிடித்து கீழே தள்ளினார். திருடன் எழுந்து விடாத வகையில் மடக்கி அமுக்கி பிடித்துக் கொண்டார். அப்படியும் விடாத திருடன் தப்ப முயல, கட்டிப்புரண்டு அவனை எழுந்து ஓடி விடாத வகையில் மடக்கி விட்டார் கெல்னர். பின்னர் போலீஸார் வந்து திருடனைப் பிடித்துச் சென்றனர்.
பிகினி உடையில் திருடனுடன் போராடி தைரியமாக மடக்கிப் பிடித்த அப்பெண் போலீஸாருக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றனவாம்.
இதுகுறித்து அப்பெண் போலீஸ் அதிகாரி கூறுகையில், 11 வருடமாக போலீஸ் அதிகாரியாக உள்ளேன். இப்போதுதான் முதல் முறையாக பிகினி உடையில் திருடனைப் பிடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications