உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ்.. பர்கர் வாங்க வரிசையில் காத்திருந்த சிம்ப்ளிசிட்டி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் 2-ஆவது பெரும் கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ் பர்கர் வாங்க வரிசையில் காத்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'டிக்ஸ் டிரைவ் இன்' என்ற சிறிய துரித உணவுக்கு கடைக்கு பர்கர் வாங்க சென்றபோது அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

Billgates seen waiting in a queue to buy Burger

அவர்களை தொடர்ந்து பில்கேட்சும் வரிசையில் நின்று பர்கர், கோகோ கோலா, ஃபிரைகள் ஆகியவற்றை வாங்கினார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்.

இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை, தற்போது அதனை விரும்புகிறேன், என கூறி சென்றுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 95.6 பில்லியன் டாலர்களாகும்.

பில்கேட்ஸ் பர்கர் வாங்க ஒரு கடையில் நின்றதை அவரது நிறுவன ஊழியர் புகைப்படமாக எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான உலகிலேயே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிறுவனமான மைக்ரோசாப்டை நடத்தி வரும் நீங்கள் (பில்கேட்ஸ்) வரிசையில் நின்று சாதாரணவரை போல் பர்கர் வாங்கியுள்ளீர்கள் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+