ப்பா.. எத்தனை ஜீன்ஸ்.. இந்த பொண்ணு கழட்ட கழட்ட நமக்கு மயக்கமே வருதே.. சாமர்த்தியசாலி தான்!
ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து, பெண் ஒருவர் ஜீன்ஸ் திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கராகஸ்: வெனிசுலா நாட்டில் பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து ஜீன்ஸ் திருடும் வீடியோ வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவை எல்லாமும் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை. ஆனால் இந்த வீடியோ நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

வெனிசுலா நாட்டில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து வெளியாகி இருக்கிறது இந்த வீடியோ. அதில் ஜீன்ஸ் பேண்டுகளை திருடி மாட்டிக்கொண்ட பெண் ஒருவர் இருக்கிறார். கழிவறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் அந்த பெண் தான் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார்.
வீடியோ எடுக்கும் நபர் எத்தனை ஜீன்ஸ்களை அவர் கழற்றுகிறார் என்பதை எண்ணும் குரல் நமக்கு கேட்கிறது. மொத்தம் ஒன்பது ஜீன்ஸ் பேண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து, இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு, கையும் களவுமாக அகப்பட்டிருக்கிறார் அப்பெண்.
அந்த பெண் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஜீன்ஸ் பேண்ட் திருட முயன்ற அந்த பெண்ணை சரமாரியாக நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். சிலர் அந்த பெண்ணுக்காக பரிதாபப்பட்டுள்ளனர். இத்தனை பேண்டுகளை அணிந்த அந்த பெண்ணின் சாமர்த்தியத்தை ஒரு சிலர் பாராட்டியும் உள்ளனர்.
அந்த பெண்ணை பாராட்டுவதும், திட்டுவதும் உங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்ட் பண்ணுங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications