இந்திய சுதந்திர தினத்தையொட்டி ரியாத்தில் நடந்த ரத்ததான முகாம்
ரியாத்: இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ரியாத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 15-08-14 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ரியாத் மாநகரில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 66 பேரிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. இதில் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கொடையாளிகள் ரத்ததானம் செய்தனர். மேலும் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஏமன், சிரியா, எத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டவரும் இந்த இந்திய சுதந்திர தின ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

ரத்ததான முகாமின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல செயலாளருமான சோழபுரம் ஹாஜா இம்முகாம் பற்றி கூறுகையில்,
இந்திய சுதந்திர தினத்தன்று இந்தியர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு பதிலாக ஆடல், பாடல் போன்ற கேளிக்கைகள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது, நடிகர், நடிகையரின் சுய புராணங்கள் பாடுவது போன்றவற்றையே காலங்காலமாக இந்தியர்கள் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நாங்கள் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மக்களுக்கு பயனுள்ள வகையில் ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம்.

இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம், உம்ரா, மற்றும் ஹஜ் பயணிகளுக்காக இதுபோன்ற முகாம்கள் நடத்துவதுடன் அவசர தேவைக்காகவும் ரத்ததானம் செய்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 31வது ரத்ததான முகாமாகும். வளைகுடா நாடுகளில் அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications