வித்தியாசமான வடிவத்தில் ராக்கெட் அனுப்பிய அமெரிக்க நிறுவனம்... 1 லட்சம் மீட்டர் பறந்து சாதனை!
அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது. ஜெஃப் பிஸோஸ் என்ற அமெரிக்கருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும் இது.
இந்த நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், இது தற்போது நாம் பார்க்கும் ராக்கெட்டுகள் போல இருக்காது. இதன் முன்பக்கம், வடிவம் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.
அதேபோல் இதன் செயல்பாடும் நிறைய மாறுபாடுகளை கொண்டு இருக்கும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன் அனுப்பிய பல்கான் ஹெவி என்ற ராக்கெட்டிற்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாசம்
எப்படி எல்லாம் இருந்தால் ராக்கெட் பறக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தார்களோ, அப்படி எல்லாம் இந்த நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட் உருவாக்கப்பட்டு இருப்பதாக, ப்ளூ ஆர்ஜின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த மாதிரி வடிவத்தில் ராக்கெட் எதுவும் உருவாக்கவில்லை என்றுள்ளனர். இதை வைத்து எளிதாக வேற்று கிரகங்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
|
மீண்டும் வரும்
பொதுவாக பூமியை விட்டு வெளியே செல்லும் ராக்கெட்டுகள் திரும்பி வராது. அப்படி வந்தால், பூமியின் வளிமண்டலம் காரணமாக அது தீப்பிடித்து சாம்பலாகும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தீயில் சாம்பலாகாமல் மீண்டும் பூமிக்கு திரும்ப வரும் ராக்கெட்டுகளை வடிவமைத்தது. தற்போது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் இப்படி வடிவமைத்துள்ளது. அவர்கள் அனுப்பிய நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டும் திரும்பி வந்துள்ளது.
|
எவ்வளவு தூரம் சென்றது
இந்த ராக்கெட் முதல்முறையாக 1 மீட்டருக்கும் லட்சத்திற்கும் அதிகமான தூரம் சென்று சாதனை படைத்து இருக்கிறது. இவ்வளவு தூரம் சென்ற பின்பும் சரியாக மீண்டும் தரையிறங்கி உள்ளது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக, ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நினைத்ததை விட இந்த ராக்கெட் அதிக தூரம் சென்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி
தற்போது இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. மீண்டும் அதேபோல் அது பூமிக்கு வந்துள்ளது. இதில் பொம்மை மனிதனை வைத்து அனுப்பி இருந்தார்கள். இன்னும் சில நாட்களில் இதில் உண்மையான மனிதனை அனுப்பி, வளிமண்டலத்திற்கு வெளியே செல்ல வைத்து பின் மீண்டும் அழைத்து வருவார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications