அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் போட்டி... பேஸ்புக்கில் வீடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பாபி ஜிண்டால், குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தனது ஃபேஸ்புக்கில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.பாபி ஜிண்டால், தற்போது லூசியானா மாகாண கவர்னராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்டதால் 3 வது முறையாக அவர் போட்டியிட இயலாது.
இதனால் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications