2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் போட்டி?
வாஷிங்டன்: அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய லூசியானா மாநில கவர்னருமாக பாபி ஜிண்டால் உள்ளார். இவர் தற்போது லூசியானா மாகாண கவர்னர் ஆக 2-வது முறையாக தொடர்ந்து வகிக்கிறார். இனி அமெரிக்க சட்டப்படி 2 தடவைக்கு மேல் இனி அவர் கவர்னர் பதவிக்கு போட்டியிட முடியாது.
எனவே, அடுத்த கட்டமாக இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேவிட் விட்டர், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'பாபி ஜிண்டால் ஒரு திறமையான மனிதர். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளார் என்றே நானும் நினைக்கிறேன்.
பாபி ஜிண்டாலை எனக்கு பிடிக்கும். அவர் மதிக்கத்தக்க ஒரு தலைவர். அவர் அதிபர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஜனாதிபதியாவதற்கான அத்தனை அரசியல் தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன,' என்று டேவிட் கூறி உள்ளார்.
பாபி ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபிஜிண்டாலின் கவர்னர் பதவி காலம் வருகிற 2015-ம் ஆண்டில் முடிகிறது. அவரை தொடர்ந்து இப்பதவிக்கு டேவிட் விட்டர் போட்டியிடுவார் என தெரிகிறது.
அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஓபாமா 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்கிறார். அவரது பதிவக்காலம் 2016-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
அதை தொடர்ந்து நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளராக பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications