மாயமான சிங்கப்பூர் ‘அழகுராணி’யின் உடல் பாகிஸ்தான் ஓடையில் கண்டுபிடிப்பு: புரோக்கர் கைது
இஸ்லாமாபாத்: காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் மாடல் அழகி கொலை செய்யப்பட்டு உடல் ஓடையில் வீசப்பட்டதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி 27 வயதான ஃபெஹ்மினா சவுத்ரி. சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தனது தாயாருக்காக சொத்து ஒன்றை வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
சவுத்ரியின் தாயார் பாகிஸ்தானில் வசித்து வந்தபோதும், பாகிஸ்தான் பயணங்களில் எல்லாம் ஓட்டல்களில் தங்குவதேயே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் சவுத்ரி. அந்தவகையில், தனது தாயாருக்கு தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளார் சவுத்ரி.
ஆனால், அதற்குப் பின் அவரது செல்போனை அவரது தாயார் தொடர்பு கொள்ள முயன்ற போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிறிது நேரத்தில் சவுத்ரியில் செல்போனில் இருந்து அவர் கடத்தப் பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்ததாகவும் போலீசில் அவரது தாயார் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சவுத்ரிக்கு சொத்து வாங்கித் தருவதாக கூறிய புரோக்கரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், சவுத்ரியைக் கொலை செய்து, சடலத்தை அருகில் இருந்த ஓடையில் வீசியதை புரோக்கர் ஒத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஓடை கரையோரம் ஒதுங்கியிருந்த சவுத்ரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications