பாகிஸ்தானில் “அடுத்த ஷாக்”.. கிரிக்கெட் விளையாடிய அப்ரிடி, பாபர் அசாம்! மைதானம் அருகே குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்திற்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது வெடித்த குண்டால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் உள்நாட்டு அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் இளம் வீரர்கள் என பலரும் விளையாடி வருகிறார்கள்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டு வரும்
நிலையில் இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கின்றன. இதனை முன்னிட்டு 6 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்களும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பயிற்சி ஆட்டம்
அந்த வகையில் நேற்று பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. பலோசிஸ்தானில் அமைந்து இருக்கும் நவாப் அக்தர் புக்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தானின் இப்போதைய கேட்பன் பாபர் அசாம் உள்ளிட்டோர் விளையாடினர்.

குண்டு வெடிப்பு
கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மைதானத்திற்கு அருகே பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அப்ரிடி, பாபர் அசாம்
காயமடைந்தவர்களின் விபரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேர இடைவெளிக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

போலீஸ் விளக்கம்
இதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை தெரிவிக்கையில், "நவாப் அக்தர் புக்தி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. அப்போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்து உள்ளார்கள். உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றோம்.

தெஹ்ரீக் ஏ தாலிபான்
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஏ தாலிபான் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது." என்று விளக்கம் அளித்து உள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த வாரம் மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications