மேஜையில் குவிக்கப்பட்ட ரூ.235 கோடி.. போனஸாக எவ்வளவு வேணாலும் அள்ளி செல்லலாம்! ஊழியர்கள் செம ஹேப்பி
பெய்ஜிங்: 800 மேஜைகளில் குவியல் குவியலாக பணத்தை குவித்து வைத்து 15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறி சீன நிறுவனம் கூறி வியக்க வைத்தது. 15 நிமிடங்களில் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கைநிறைய அள்ளிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நம் நாட்டில் பல நிறுவனங்கள் ஆண்டுதோறும் சம்பளம் உயர்த்துவது இல்லை. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும், நிறுவனங்களின் ஆண்டு விழா கொண்டாட்டங்களின்போதும் போனஸ் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால் சீனாவில் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்காக ரூ.237 கோடியை மேஜையில் தட்டி வைத்து 15 நிமிடத்தில் ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறிய சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளதோடு, பலரையும் பொறாமைப்பட வைத்துள்ளது. ஊழியர்களுக்கு இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் எது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
சீனாவின் ஹெனான் குவாங்ஷான் கிரேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் ஆண்டு இறுதி போனஸ் வழங்குவதாக அறிவத்தது. வழக்கம்போல் தான் குறிப்பிட்ட அளவுக்கு தான் போனஸ் கிடைக்கும் என்று ஊழியர்கள் நினைத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, அந்த நிறுவனம் ஒரு அறையில் 100 யுவான் நோட்டுகளை 180 மில்லியன் யுவான் (நம் நாட்டின் மதிப்பில் ரூ.237 கோடி) கட்டுக்கட்டாக நிரப்பி வைத்திருந்தது. அந்த அறைக்கு ஊழிய்ர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அதன்பிறகு ரூபாய் நோட்டுகள் மேஜையில் கொட்டப்பட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் 15 நிமிடம் வழங்கப்பட்டது. அதற்குள் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி எடுத்து கொள்ளலாம். அதுதான் போனஸ் என்று அறிவிக்கப்பட்டது.
800 மேஜைகளில் குவிக்கப்பட்டு இருந்த பணத்தை சுமார் 7,000 ஊழியர்கள் அள்ள தொடங்கினர். ஒவ்வொருவரும் போட்டி போட்டி பணத்தை அள்ளிச் சென்றனர். இது கடந்த பிப்ரவரி 13ம் தேதி நடந்தது. ஊழியர்களின் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற நிதிச் சுமைகளைக் குறைப்பதே நோக்கமாக கொண்டு இந்த கிப்ட்டை நிறுவனம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஒவ்வொருவரும் மேஜையில் குவித்து போடப்பட்டு இருந்த பணத்தை போட்டி போட்டு எடுப்பதும், அதன்பிறகு கட்டுக்கட்டாக பணத்தை மகிழ்ச்சியோடு எடுத்து செல்லும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதுபற்றி நிறுவனத்தின் தலைவர் சூய் பெய்ஜுன் (Cui Peijun) கூறுகையில், '' நாம் ஏன் வாஷிங் மெஷின், தங்க நகைகளை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும்? அதற்கு பதிலாக பணத்தை கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு பிடித்தே வாங்கி கொள்வார்கள். முந்தைய ஆண்டுகளில் அளித்த பரிசுகளுக்கு மாறாக, இந்த முறை அதிக ரொக்கத்துடன் அனைவருக்கும் கூடுதலாக 20,000 யுவான் வழங்க முடிவெடுத்தேன். ஆன்லைன் பரிமாற்றங்கள் உட்பட நிறுவனத்தின் மொத்த ஆண்டு இறுதிப் பரிசு.
180 மில்லியன் யுவானை தாண்டியது. இது 2024 ஆம் ஆண்டில் ஈட்டிய 270 மில்லியன் யுவான் லாபத்தில் சுமார் 70% ஆகும். இன்றைய இளைஞர்களுக்கு கார் கடன்கள், வீட்டுக் கடன்கள் உள்ளன; நாங்கள் வழங்கும் போனஸ் அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் '' என்றார். இந்த நிறுவனம் கிரேன்கள் உள்பட பிற பழுதூக்கும் உபகரணங்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை போனஸ் வழங்கிய நிறுவன தலைவர் சூய் பெய்ஜுன் வைத்துள்ளார்.
இந்த நிறுவனம் இப்படி வித்தியாசமாக போனஸ் வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஆம் ஆண்டில், 260 மில்லியன் யுவான் லாபம் ஈட்டியதால் அதில் 170 மில்லியன் யுவானை போனஸாக வழங்கியது. சர்வதேச மகளிர் தினத்தன்று 2,000 பெண் ஊழியர்களுக்கு சுமார் 1.6 மில்லியன் யுவான் போனஸ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications