இனி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்.. பிரேசில் எடுத்த அதிரடி முடிவு
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பிரேசில் முடிவு செய்துள்ளது
பிரஸ்ஸிலியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த பிரேசில் தயாராகிவிட்டது.. தன்னுடைய நாட்டில் 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் பெற தகுதியுடையவர்கள் என்றும் பிரேசில் அறிவித்துள்ளது.
கொரோனாவைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது.. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எனினும், ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வராத நிலையில், அந்தந்த நாடுகளின் சார்பில் ஏராளமான விழிப்புணர்கள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. இதில் மிக முக்கியமானது பிரேசில்தான்.. ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தென்அமெரிக்க நாடாக பிரேசில் இருந்தது..
இதையடுத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.. கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.. பின்னர் மெல்ல மெல்ல தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.. இப்போதைக்கு, முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது...
இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும்போது, 5 மாதங்களுக்கு முன்பு, தடுப்பூசியின் 2-வது டோஸை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு செய்து விட்டோம்.. 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல நாடுகள் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுத்த நிலையில், பிரேசிலும் இதில் இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications